பிரதான செய்திகள்

மட்டு-பழைய கல்முனை காத்தான்குடி ஊர் வீதியின் இரண்டாம் கட்ட காபட் இடும் பணிகள் ஆரம்பம்.

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

மிக நீண்ட காலமாக இடைநிறுத்தபட்டிருந்த பழைய கல்முனை காத்தான்குடி ஊர் வீதியின் இரண்டாம் கட்ட பணிகள் மட்டக்களப்பு வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டு முடியும் நிலையில் காணப்படும் காத்தான்குடி ஊர் வீதியின் இரண்டாம் கட்ட வீதிக்கான காபட் இடும் பணிகள் ஏப்ரல் 01 நேற்று சனிக்கிழமை காத்தான்குடி ஊர் வீதி முதலாம் குறிச்சி பகுதியிலிருந்து ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இன்று ஆரம்பிக்கப்பட்ட பழைய கல்முனை காத்தான்குடி ஊர் வீதிக்கான காபட் இடும் பணிகள் நாளை  03 திங்கட்கிழமை முழுமையாக நிறைவு செய்வதற்கு எதிர்பார்க்கப்படுவதாகவும்,இரண்டாம் கட்ட காபட் இடும் பணிகளுக்கு மாத்திரம் 10 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பு வீதி அபிவிருத்தி அதிகார சபையின் களப் பொறியியலாளர் ஏ.லிங்கேஸ்வரன் தெரிவித்தார்.

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கிழக்கு மாகாணப் பணிப்பாளர் பொறியியலாளர் வை.தர்மரட்ணம் ,மட்டக்களப்பு வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பிரதம பொறியியலாளர் ரீ.பத்மராஜா ஆகியோரின் வழிகாட்டலில் இடம்பெற்று வருகின்ற பழைய கல்முனை காத்தான்குடி ஊர் வீதியின் இரண்டாம் கட்ட காபட் இடும் பணிகளில் அதிகளவான இயந்திரங்களும்,ஊழியர்களும், மட்டக்களப்பு வீதி அபிவிருத்தி அதிகார சபையின் களப் பொறியலாளர்களும் ஈடுபட்டு வருகின்றனர்.

குறித்த வீதி இரண்டு வழி போக்குவரத்து செய்யக் கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளதுடன் ,மேலதிகமாக இரண்டு பக்கமும் சைக்கிள் வழிப் பாதையும் ,இரண்டு பக்கமும் வடிகாணும் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

சதொசவிற்கு நெல்களை வழங்க திட்டம்

wpengine

இடம்பெயர்ந்து வாழும் மக்களுக்கான 10000 ரூபா கொடுப்பனவு றிஷாட் பிரதமருக்கு கோரிக்கை

wpengine

25வருடகாலமாக இடம்பெயர்ந்து வாழும் மக்களுக்கு வீடுகளை வழங்கிய அமைச்சர் றிஷாட்

wpengine