Breaking
Sun. Nov 24th, 2024
(ஜெம்சித் (ஏ) றகுமான்)
மட்டக்களப்பு மாவட்டம் போதைவஸ்து பாவனையில் நாடளாவிய ரீதியில் முதலாம் இடத்தில் உள்ளது. என ஆய்வுத் தகவல்கள் கூறுகின்றன.இந்த மாவட்டத்திலே பிறந்தவன் என்ற வகையிலும் மட்டக்களப்பு மாவாட்ட பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையிலும் இது கவலையளிக்கின்றது.

கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலகத்தில் கிராமிய பொருளாதார அமைச்சின் கீழ் வறியவர்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்கான உபகரணம் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட  கிராமிய பொருளாதார அபிவிருத்தி அலுவல்கள் பிரதி அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி அங்கு உரையாற்றுகையிலை மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

மட்டக்களப்பு மாவட்டத்தை பொறுத்தவரை கல்வியில் அபிவிருத்தி அடைந்து வரும் நிலையிலே அதற்க்கு நிகராக போதைபொருள் பாவனையாளர்களும் அதிகரித்து செல்கின்றார்கள்.
தங்களது வாழ்வாதாரத்தை கஸ்டமின்றி நடாத்த வேண்டும் என்பதற்காக தொழிலுக்கு செல்லும் அதிகமானவர்கள் உழைத்த பணத்தின் பெரும்பாலானவற்றை போதைபொருட்களுக்கு செலவிடுவது என்பது கவலையளிக்கின்றது.

வெயில்,மழை என்று பாராது தங்களது வியர்வை சிந்தி உழைக்கும் பணம் இவ்வாறு எந்த ஒரு பயனும் இல்லாமல் வீணாக்கிப் போகின்றது என்பது ஏற்றுக் கொள்ள முடியாத செயலாகும்.

நாட்டிலே அதிகாமான குற்றச் செயல்களுக்கு முக்கிய வகிபாகம் வகிப்பது போதைப்பொருள் பாவனையே.நாம் அன்றாடம் கேள்வியுறும் அத்தனை குற்றச்செயல்களுக்கும் காரணத்தை தேடுகின்ற போது முதல் காரணம் போதைபொருள் பாவனையாகவே இருக்கின்றது.

இன்று அதிகமானவர்களால் உச்சரிக்கப்படும் சொல் வறுமையாகும்.மட்டக்களப்பு மாவட்டத்தை பொறுத்தவரை தொழில் வாய்ப்புகள் இருக்கின்றன நாளாந்தம் வேலை செய்கின்றார்கள் ஊதியம் பெறுகின்றார்கள் ஆனால் வீடுகளிற்க்கு செல்லும் போது பணம் இருப்பதில்லை. உழைத்த பணத்தை மதுபானசாலைக்கு கொடுத்து விட்டு செல்கின்றார்கள். இவ்வாறு நடந்தால் வறுமை இருக்கத்தான் செய்யும்.எனவே நன்றாக சிந்தித்து பணத்தை செலவிடுங்கள்.

பாடசாலை மாணவர்களுக்கு மத்தியிலும் போதைபொருள் பாவனை ஊடுறுவியுள்ளதாகவும் அறிய முடிகின்றது. பாசாலை மாணவர்களை குறிவைத்து விற்பனை செய்யும் குழுக்ளை வண்மையாக கண்டிப்பதோடு ஆதாரத்துடன் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் ஆனால் மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க படும் என்பதை இந்த இடத்தில் எச்சரிக்கையாக கூறிக்கொள்கின்றேன்.
எதிர்காலம சமூகத்தை போதைபொருளற்ற சமூகமாக உருவாக்க வேண்டும் என்பதற்காகவும் எமது பிரதேசத்தில் போதைப்பொருள் பாவனையை குறைப்பதற்காகவும் எதிர்வரும் ஆண்டில் கிராமிய பொருளாதார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் 15 இலட்சம் ரூபாயினை ஒதுக்கீடு செய்து  சாதாரணதர, உயர்தர மாணவர்களை அழைத்து நாங்கள் அனைவரும் இணைந்து போதைப் பொருள் ஒழிப்பிற்கான பல்வேறு வேலைத்திட்டத்தினை ஆரம்பிக்க இருக்கின்றோம்.

அத்தோடு

போதைப் பொருள் பாவனையை தடுத்து நிறுத்த வேண்டுமாக இருந்தால் சமூர்த்தி
அதிகாரிகள், கிராம சேவக அதிகாரிகள் மக்கள் மத்தியில் போதைப்பொருள் பற்றி விளிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டும் என்பதையும் இந்த இடத்திலே வினயமாக கேட்டுக் கொள்கின்றேன். எனக் கூறினார்.

இந்நிகழ்வில் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர்  , பிரதேச செயலக உதவித் திட்டப்பணிப்பாளர்  , உயர் அதிகாரிகளும், மற்றும் பயனாளிகளும்  கலந்து சிறப்பித்தனர். 
vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *