பிரதான செய்திகள்

மட்டக்களப்பு- மயிலந்தனை கிராம மக்கள் குடி நீர் இன்றி மக்கள் அவதி கவனம் செலுத்தாத அரசியல்வாதிகள்

(அனா)
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஓட்டமாவடி பிரதேச சபை எல்லைப் பிரிவில் காணப்படும் புணாணை கிராம சேவகர் பிரிவிற்குட்ட மீள் குடியேற்ற கிராமமான மயிலந்தனை கிராம மக்கள் வரட்சி காரணமாக குடி நீர் இன்றி கஸ்டப்படுவதாக தெரிவிக்கின்றனர்.

98 குடும்பங்களில் 236 பேர் வசித்து வரும் இக் கிராம மக்கள் கடந்த கால அசாதார சூழ்நிலை நிலவிய காலங்களில் மிகவும் பாதிக்கப்பட்ட கிராமமாகும் 1992.08.09ம் திகதி இனம் தெரியாத ஆயுத தாரிகளின் துப்பாக்கி ரவைகளுக்கு சிறுவர்கள் பெரியவர்கள் என 35 பேரை இழந்த இக்கிராமம் யுத்தம் முடிவுற்றதன் பின்னர் மீண்டும் குடியேறி வாழ்ந்து வருகின்றனர்.

தங்களது ஜீவனோபாயத்திற்காக விவசாயம், நன்நீர் மீன் பிடி, கால்நடை வளர்ப்பு போன்ற துறைகளில் ஈடுபட்டு வரும் இக் கிராம மக்கள் ஒவ்வொரு வருடமும் ஜூலை மாதம் தொடக்கம் நவம்பர் மாதம் வரை தங்களுக்கு குடி நீர் இன்றி காணப்படுவதாகவும் அக்காலப் பகுதியிகளில் கிணறுகளில் நீர் வற்றுவதுடன் மகாவலி கங்கையில் இருந்து மயிலந்தன்னை கிரமத்திற்கு விவசாயத்திற்காக வரும் “விஸர் ஓடை” என்று அழைக்கப்படும் ஓடையிலும் நீர் குறைந்துள்ளதனால் எங்களது அன்றாட தேவைக்கும் எங்களது கால்நடைகளுக்கும் நீர் இன்றி கஸ்டப்பட்டு வருவதாகவும் குடி நீர் பிரச்சினைக்கு எங்களுக்கு நிறந்தர தீர்வு பெற்றுத்தர உரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் கோறிக்கை விடுகின்றனர்.

இதே வேளை எங்கள் பிரதேசத்திற்கு ஓட்டமாவடி பிரதேச சபையால் ஐந்து நீர் தாங்கிகள் எங்கள் கிராமத்திற்குள் வைத்து அதற்குள் நீர் வழங்கி வருகின்றனர் அது தினமும் நீர் வழங்கப்படுவதில்லை ஐந்து நாள் ஆறு நாட்களுக்கு ஒரு முறைதான் எங்கள் கிராமத்திற்கு பிரதேச சபையால் நீர் வழங்கப்படுகின்றது இது போதுமானதாக இல்லை என்றும் பிரதேச சபையால் தினமும் நீர் வழங்கப்படுமாக இருந்தால் உதவியாக இருக்கும் என்றும் கோறிக்கை விடுக்கின்றனர்.

இப்பகுதியில் வரட்சி காரணமாக பயிரினங்கள் கருகி காணப்படுவதுடன் கால்நடைகளுக்கும் நீர் இன்றி அப்பகுதி கால் நடை வளர்ப்பாளர்கள் மிகவும் சிறமங்களை எதிர்நோக்குகின்றனர்.unnamed-3

மயிலந்தன்னை கிராம மக்கள் வரட்சி காரணமாக எதிர் நோக்கும் குடி நீர் பிரச்சினை தொடர்பாக ஓட்டமாவடி பிரதேச சபையின் செயலாளர் யோ.சர்வேஸ்வரனை கேட்ட போது.unnamed-1

ஓட்டமாவடி பிரதேச சபை பிரிவில் பல கிராமங்கள் வரட்சியால் பாதிக்கப்பட்டு காணப்படுகின்றது இதில் மயிலந்தன்னை கிராமமும் உள்ளது நாங்கள் பாதிக்கப்பட்ட எல்லா கிராமங்களுக்கும் எங்களது சபையின் பவுசர்கள் மூலம் நீர் வழங்கி வருகின்றோம் எங்களது சபையில் இரண்டே இரண்டு பவுசர்கள் இருப்பதால் வரட்சியால் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு தினமும் நீர் வழங்குவதில் சிறமம் இருக்கின்றது மயிலந்தன்னை கிராமத்திற்கு மூன்று தினங்களுக்கு ஒரு முறை பவுசர் மூலம் நீர் வழங்க முடியும் என்று தெரிவித்தார்.unnamed

Related posts

மீன் ஏற்றுமதி தடை! ஐரோப்பிய ஒன்றியத்தி்னால் நீக்கம்

wpengine

வில்பத்து வனத்தை அழித்த அமைச்சர் ரிஷாதை தூக்கில் போட வேண்டும்! ராவணா பலய

wpengine

நாட்டின் நிலைமை தொடர்பில் ஹக்கீம் கலந்துறையாடல்

wpengine