பிரதான செய்திகள்

மட்டக்களப்பு மக்கள் சந்திப்புக்களிலும் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்டுக்கு பெரு வரவேற்பு!

மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், நேற்று மாலை (07) மட்டக்களப்பு மாவட்டத்தின் ஓட்டமாவடி, ஏறாவூர், காத்தான்குடி ஆகிய பிரதேசங்களுக்கு விஜயம் செய்து ஆதரவாளர்கள், முக்கியஸ்தர்கள் ஆகியோரை சந்தித்துக் கலந்துரையாடினார்.

மக்கள் காங்கிரஸ் தவிசாளரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான அமீர் அலியின் தலைமையில் குறித்த மக்கள் சந்திப்புக்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

ஆறு மாத கால அநியாய சிறைப்படுத்தலின் பின்னர், தமது பிரதேசத்துக்கு வருகை தந்த தலைவர் ரிஷாட் பதியுதீனை மக்கள் அன்புடன் வரவேற்று நலம் விசாரித்தனர்.

இதேவேளை, தனது விடுதலைக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொண்டார்.

Related posts

மே மாதம் சம்பளம் பெறாத 7500 அரச ஊழியர்

wpengine

வவுனியாவில் 13வயது மாணவியின் காதல் துஷ்பிரயோகம்

wpengine

மாந்தை மேற்கு ஜனாதிபதி சேவையில் றிஷாட்,சார்ள்ஸ்,அடைக்கலநாதன் (படம்)

wpengine