பிரதான செய்திகள்

மட்டக்களப்பு பிரதேச செயலக ஊழியர்களுக்கிடையிலான கலாச்சார போட்டி

(அனா)
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் அரச உத்தியோகத்தர்களுக்கிடையிலான கலாசார போட்டியொன்று நேற்று (வியாழக்கிழமை) மட்டக்களப்பு நாவற்குடா இந்துக்கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பதிநான்கு பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் தமது கடமை திறமைகளுக்கு அப்பால் அவர்களுக்குள் புதைந்துள்ள கலைத்திறமையினை வெளிக்கொணரும் வகையில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த போட்டியில் கிராமிய பாடல்கள் மற்றும் நாடகங்கள் இடம் பெற்றதுடன் இதன்போது 09 கிராமிய பாடல் குழுவும் 10 நாடக குழுவும் பங்குகொண்டதாகவும் மாவட்ட உதவி அரசாங்க அதிபர் எஸ்.ரங்கநாதன் தெரிவித்தார்.unnamed-3

இந்த போட்டியின்போது மட்டக்களப்பு மாவட்டத்தின் அழகு, அதன் இயற்கை தன்மை, அதன் கலாசாரம் பண்பாடுகள் மற்றும் மாவட்டத்தின் பழமையினை வெளிப்படுத்தும் வகையில் கிராமிய பாடல்கள் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.unnamed-1

மட்டக்களப்பு மாவட்ட உதவி அரசாங்க அதிபர் எஸ்.ரங்கநாதன் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் நாடகத்தில் முதலாம் இடத்தினை காத்தான்குடி பிரதேச செயலகமும் கிராமிய பாடலில் முதலாம் இடத்தினை பட்டிபளை பிரதேச செயலகமும் பெற்றுக் கொண்டதாக மட்டக்களப்பு மாவட்ட கலாசார உத்தியோகத்தர் எம்.ஏ.சி.செயினுலாப்தீன் தெரிவித்தார்.unnamed

Related posts

உற்பத்தித்திறன் பயிற்சி நெறிக்கான சான்றிதழ் வழங்கிய அ. ஸ்ரான்லி டி மெல்

wpengine

கைதியினை தப்பிக்க விட்ட மன்னார் பொலிஸ்! மூன்று பேர் பணி நீக்கம்

wpengine

வவுனியா சைவப்பிரகாசா ஆரம்ப பாடசாலைக்கு வாத்திய இசைக்கருவிகளை வழங்கிய மஸ்தான் (பா.உ)

wpengine