விளாவட்டவான் மாதிரிக் கிராமத்தில் தொழில் வழிகாட்டலுடன் சேமிப்பை உயர்த்தும் ஆலோசனைக் கூட்டம் 2017.10.31 இன்று காலை நடைபெற்றது.
சமுர்த்தி மாதிரிக் கிராம அபிவிருத்தி திட்டத்திற்கென வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட விளாவட்டவான் கிராமத்திற்கு இதுவரை சுமார் 70 இலட்சம் நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான சுயதொழில் உபகரணங்கள் வழங்கப்பட்டுவருகின்றது.
இதில் விவசாயம்,மீன்பிடி, சந்தைப்படுத்தல், சிறுகைத்தொழில் மற்றும் கால்நடை வளர்ப்பு உள்ளிட்ட 163 திட்டங்களுக்காக 67 இலட்சத்தி 35,000 ரூபாவும் மற்றும் இரண்டு வீட்டு புனரமைப்பு வேலைகளுக்காக 3இலட்சம் ரூபாவும் வழங்கப்பட்டுள்ளது.
இதன் போது மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் பி.குணரெட்ணம் கருத்துத் தெரிவிக்கையில்
இக் கிராம அபிவிருத்தி திட்டத்தின் ஊடாக தொழில் துறையில் ஆர்வமுள்ள குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு மீள அறவிடப்படபத முழு மானிய அடிப்படையில் சுயதொழில் வாய்ப்பினை வழங்கி அவர்களை சிறந்த முறையில் வலுப்படுத்துவதே இத் திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.
இத் திட்டத்திற்கு எமது திணைக்கள உத்தியோகத்தர்கள் விசேட கவனம் செலுத்தி கண்காணிப்பு நடவடிக்கைகளையும் ஆலோசனைகளையும் வழங்கி வருகின்றனர். இத் திட்டங்களில் பயனாளிகளுக்கு ஏதும் தேவைகள் பிரச்சனைகள் இருப்பன் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் அல்லது முகாமையாளர்கள் அல்லது மாவட்ட சமுர்த்தி அலுவலக உத்தியோகத்தர்களை தொடா்புகொள்ளவும். என மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் பி.குணரெட்ணம் மேலும் தெரிவித்தார்.