பிரதான செய்திகள்

மட்டக்களப்பு இளம்பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு – கல்லடி, நாவற்குடா இசை நடனக்கல்லூரி வீதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து இளம்பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
18 வயதுடைய சுப்ரமணியம் கிருத்திகா எனும் யுவதியே இவ்வாறு வீட்டில் தூக்கில் தொங்கியவாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளர்.

இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் தீவிரப்படுத்தி வருகின்றனர்.

இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக்காலமாக தற்கொலைகள் அதிகரித்து வருவது கவலையினை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக இளம்பெண்கள் மத்தியிலான தற்கொலைகள் அதிகரித்து வருவதை காணமுடிவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த 23 நாட்களில் எட்டுக்கும் மேற்பட்ட தற்கொலை மரணங்கள் இடம்பெற்றுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில வருடங்களாக தொடர்ச்சியாக அதிகரித்துவரும் இவ்வாறான சம்பவங்களை தடுப்பது குறித்து முறையான திட்டங்கள் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Related posts

மன்னார் மறை மாவட்ட ஆயரை சந்தித்த சிவகரன் குழுவினர்

wpengine

அரச அதிகாரிகள் மக்களின் தேவைகளை புரிந்து பணியாற்ற வேண்டும்-அமைச்சர் வஜிர அபேயவர்த்தன

wpengine

SLEAS பரீட்சையில் மீராவோடை தாஜுன்னிஷா ஜிப்ரி, பழைய மாணவன் ரஹீம்

wpengine