பிரதான செய்திகள்

மடு பிரதேச செயலாளர் பிரிவில் மான் வேட்டை

மடு பிரதேச செயலாளர் பிரிவில் மான் வேட்டையில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, வேட்டையாடப்பட்ட சுமார் 50 கிலோ மதிப்புள்ள மான் ஒன்றும் இன்று காலை மடு வன விலங்கு பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளினால் மீட்கப்பட்டுள்ளது.

மடு பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட பாலம்பிட்டி-பறங்கியாறு பகுதியில் நேற்று காலை மான் வேட்டையில் ஈடுபட்ட போதே மடு வன விலங்கு பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளினால் குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.

இதன் போது குறித்த நபரிடம் இருந்து சுமார் 50 கிலோ எடை கொண்ட வேட்டையாடப்பட்ட மானும் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட குறித்த நபரை மடு சுற்றுலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மடு வன விலங்கு பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

நிவாரண அமைப்பின் ஊடாக வவுனியாவில் 5 மாடு,5 ஆடு வழங்கிய காதர் மஸ்தான் (பா.உ)

wpengine

ஊரான் வீட்டுக் கோழியை அறுத்து உம்மா பேரில் கத்தம் ஓதுவது மக்களிடம் இனிமேல் எடுபடாது!

wpengine

அமைச்சர் றிஷாட்டின் மீள்குடியேற்றதை தடுக்கும் முஸ்லிம் அமைச்சரும்,தமிழ் அரசியல்வாதிகளும்

wpengine