பிரதான செய்திகள்

மடு திருத்தலத்தில் சிங்கள தாய் மரணம்

மன்னார் மாவட்டத்தில் மடு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட மடு தேவாலயப்பகுதியில் மாலை ஏற்பட்ட இடி மின்னல் தாக்கத்தின் காரணமாக இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் சம்பவயிடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவத்தில் உயிரிழந்த இளம் தாயின் சடலம் மன்னார் பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

 

இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் சிலாபம் பகுதியைச் சேர்ந்த 25 வயது்டைய இரு பிள்ளைகளின் தாயாரான ‘திலினி மதுசன்’ என தெரிய வந்துள்ளது.

மன்னார் மாவட்டம் மடு திருத்தலத்தில் ஆவணி மாத திருவிழா எதிர்வரும் 15 ஆம் திகதி இடம் பெறவுள்ள நிலையில் நாட்டின் பல பாகங்களில் இருந்தும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் மடு திருத்தலத்திற்கு  வருகை தந்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகனை மடு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஐக்கிய தேசியக் கட்சியின் முஸ்லிம் செயலாளர் இராஜினாமா

wpengine

சிறைச்சாலை அதிகாரி சுட்டுக்கொலை – துப்பாக்கிதாரி போலி கடவுச்சீட்டுடன் கைது .

Maash

யானை சின்னல் எதிர்வரும் பொதுத்தேர்தலில்!

wpengine