ஐநாவால் அங்கீகரிக்கப்பட்ட தீவிரவாதியாக அறிவிக்க மசூத் அசாருக்கு எதிராக உறுதியான ஆதாரம் தேவை என்று சீனா மீண்டும் பிடிவாதம் காட்டியுள்ளது. இந்திய நாடாளுமன்ற தாக்குதல் மற்றும் பதன்கோட் ராணுவ முகாம் மீதான தாக்குதலில் தொடர்புடையவன் ஜெய்ஷ் , முகம்மது இயக்க தலைவன் மசூத் அசார். இவனை ஐ.நா.வால் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இது வரை மூன்று முறை ஐ.நா. சபையில் ,துெதாடர்பான தீர்மானத்தை இந்தியா கொண்டு வந்தபோதும் சீனா தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி அதை தடுத்து நிறுத்தி வருகிறது. தற்போது 4வது முறையாக மசூத் அசாரை தீவிரவாத பட்டியலில் சேர்க்க இந்தியா முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்த முறை சீனா எதிர்ப்பு தெரிவிப்பதை தடுக்கும் நோக்கத்தில் இந்தியா முன்கூட்டியே களத்தில் இறங்கி சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஆனால் வழக்கம் போல் சீனா எதிர்ப்பு காட்டி வருகிறது.
தற்போது மசூத் அசார் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டதாக உறுதியான ஆதாரம் இருந்தால் ஐ.நா.வில் கொண்டுவரப்படும் தீர்மானத்தை ஆதரிப்பதாக சீனா தெரிவித்துள்ளது. இதுபற்றி சீனா வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர். ஜெங் ஜங் கூறுகையில்,அடுத்த கட்டமாக இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஜெய்சங்கர் மற்றும் சீனாவின் வெளியுறவுத்துறை சிறப்பு துணை அமைச்சர் ஜாங் ய.ஸ்யூ ஆகியோர் பங்கெடுக்கும் பேச்சுவார்த்தை சீன தலைநகர் பெய்ஜிங்கில் பிப்ரவரி 22ல் நடைபெற உள்ளது” என்றார்.