பிரதான செய்திகள்

மசாஹிர் மஜீத் மரணித்த செய்தி கேட்டு மிகவும் கவலையடைந்தேன்-ரவூப் ஹக்கீம்

அன்னாரின் மறைவு குறித்து அவர் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

மன்னார் கொண்டச்சியை பிறப்பிடமாகவும் புத்தளம், நுரைச்சோலை, கொய்யாவாடி, அரபா நகரை வசிப்பிடமாகவும் கொண்ட மஸாஹிர் மஜீத் இன்று (21) புத்தளம் வைத்தியசாலையில் காலமானார்.

மஸாஹிர் கட்சிக்கு ஆதரவாக சமூக ஊடக எழுத்துப் பணிகளில் நீண்ட காலமாக ஈடுபட்டுவந்தார். அத்துடன் கட்சியின் இளைஞர் காங்கிரஸின் முன்னேற்றத்திற்கும் தனது முழு பங்களிப்பையும் வழங்கி வந்தார்.

அதுமட்டுமல்லாமல் நாடுபூராகவுள்ள இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்கள் மற்றும் கட்சி சார்பாக சமூக வலைத்தளங்களில் பங்களிப்பு செய்யக்கூடியவர்களுடன் நெருங்கிய தொடர்பை பேணிவந்தார்.

கட்சியினால் செயற்படுத்தப்பட்ட “வீட்டுக்கு வீடு மரம்” செயற்திட்டத்தின்போது கட்சித் தலைவருடன் இணைந்து அம்பாறை, திருகோணமலை, குருநாகல், புத்தளம் மற்றும் நுவரெலியா உள்ளிட்ட பல மாவட்டங்களுக்குச் சென்று தனது பங்களிப்புகளை வழங்கியிருந்தார்.

அனைவருடன் சகஜமாகவும் அன்பாகவும் பழகக்கூடிய மஸாஹிர் நீண்ட காலமாக சுகயீனமுற்றிருந்தார்.

அன்னாரது மறைவினால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன். அவரது பாவங்களை மன்னித்து, மறுமைநாளில் ஜன்னத்துல் பிர்தெளஸ் எனும் சுவர்க்கம் கிடைக்க பிரார்த்திப்போமாக.

Related posts

ஹிஸ்புல்லாஹ் அபிவிருத்திக் குழுக்களின் இணைத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

wpengine

முகமதுசமி மனைவி சூதாட்ட புகார்!

wpengine

உயர் நீதிமன்றில் சுமார் 17 மனுக்கள் தாக்கல் நாளை விசாரணை

wpengine