அதிகாரிகளும், அலுவலர்களும் வெறுமனே அலுவலகத்தில் பணிபுரிந்தால் மட்டுமே போதுமென்ற மனோ நிலையை மாற்றி, மக்கள் பிரச்சினைகளுடன் நேரடித் தொடர்புபட்ட அரச ஊழியர்கள், அந்த மக்களைச் சந்தித்து பிரச்சினைகளை கேட்டறிந்து உரிய தீர்வை சரியாக வழங்க வேண்டுமென நேற்று (03.07.2017) வன்னிமாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தின் போது அமைச்சரும், இணைத்தலைவருமான ரிஷாட் பதியுதீன் அறிவுறுத்தினார்.
பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் வெலிஓயா பிரதேச செயலகத்தில் நடைபெற்ற போதே அமைச்சர் ரிஷாட் பதியுதீன் சில அதிகாரிகளின் நடவடிக்கைகளை கடிந்து கொண்டார்.
கூட்டத்திற்கு சமூகமளிக்காத அதிகாரிகள் தொடர்பிலும் அவர் தனது கவனத்தை செலுத்தினார்.
‘அபிவிருத்திக் குழுக் கூட்டங்களில் மேற்கொள்ளப்படும் முடிவுகளை அமுல்படுத்த தயங்குகின்றீர்கள், அலட்சியப்படுத்துகின்றீர்கள் மக்கள் படுகின்ற அவஷ்தைகளை நீங்கள் கணக்கெடுக்காது, நினைத்த மாத்திரத்தில் வேலை செய்கின்றீர்கள்’ இந்த நிலையை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. என்று கூறிய அமைச்சர், தொடர்ந்தும் இவ்வாறு நீங்கள் நடந்து கொண்டால் உரிய நடவடிக்கை எடுப்போம் என்றார்.