பிரதான செய்திகள்

மக்கள் செல்வாக்கை இழந்த சாய்ந்தமருது ஜெமிலின் அறிக்கை

கல்முனை மாநகரசபைக்கான தேர்தலில் போட்டியிடும் பொருட்டு சாய்ந்தமருது பிரதேசத்தில் இருந்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக வேட்பாளர்கள் எவரையும் நிறுத்தப்போவதில்லை என அந்தக் கட்சியின் பிரதித் தலைவர் எம்.ஏ.ஜெமீல் தெரிவித்துள்ளார்.

கல்முனை மாநகர சபைக்கான தேர்தலில் போட்டியிடும் பொருட்டு சுயேட்சைக் குழுவொன்றினை பெரிய பள்ளிவாசல் களமிறக்கியுள்ள நிலையில் அந்த குழுவுக்கு ஆதரவு வழங்கும் வகையிலேயே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி சபை கிடைக்கும் வரை எந்தவொரு தேர்தலிலும் அரசியல் கட்சிகளுக்கு சாய்ந்தமருது பிரதேசம் ஆதரவளிப்பதில்லை என அந்த ஊர் பெரிய பள்ளிவாசல் தீர்மானித்துள்ளது.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் கல்முனை மாநகரசபைக்கான தேர்தலில் போட்டியிடும் பொருட்டு சுயேட்சைக் குழுவொன்றினை சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் தற்போது களமிறக்கியுள்ளது.

அந்த சுயேட்சைக் குழுவுக்கு ஆதரவினை வழங்குவதற்காகவே சாய்ந்தமருது பிரதேசத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக வேட்பாளர்களை களமிறக்குவதில்லை என நாம் தீர்மானித்துள்ளோம்.

தமது இந்த நிலைப்பாடு குறித்து சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் தலைவர் வை.எம்.ஹனிபாவுக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.

Related posts

ஷரீஆ வங்கி முறைமை சட்டரீதியானது பலசேனாவின் குற்றச்சாட்டுக்கு ஹிஸ்புல்லாஹ் பதிலடி

wpengine

வாட்ஸ் ஆப், தரவுகளை பேஸ்புக்கிற்கு அளிப்பதால் வாட்ஸ் ஆப் பயன்படுத்தவேண்டாம்

wpengine

மாகாண சபைகளைப் புறக்கணித்து தீர்மானமெடுப்பதை கண்டிக்கின்றோம் : வடக்கு முதலமைச்சர்

wpengine