பிரதான செய்திகள்

மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் அவர்களினால் சிலாவத்துறை பிரதேச வைத்தியசாலைக்கு 5இலட்சம் பெறுமதியான அத்தியாவசிய மருந்துகள் வழங்கி வைப்பு!

மன்னார் மாவட்டம் முசலி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட சிலாவத்துறை பிரதேச வைத்தியசாலை அபிவிருத்திச் சங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க சுமார் ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் சிலவற்றை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான அல் ஹாஜ் ரிஷாட் பதியுதீன் அவர்களினால் பிரதேச வைத்தியசாலை பொறுப்பதிகாரி வைத்தியர் தன்ஸீஹ் அவர்களிடம் நேற்று (22) வழங்கி வைக்கப்பட்டது.

இக்கட்டான இக்கால சூழ்நிலையிலும் பிரதேச வைத்தியசாலை மற்றும் மக்களின் நலன் கருதி இவ் உதவியை பெற்றுக் கொடுத்த பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் அவர்களுக்கு வைத்தியசாலை அபிவிருத்திச்சங்கம் நன்றியை தெரிவித்துள்ளது.

Related posts

வெற்றிலை ஏற்றுமதியாளர்களின் ‘தீர்வை’ பிரச்சினையை பாகிஸ்தான் அரசு தீர்க்க வேண்டும் அமைச்சர் றிஷாட்

wpengine

இனவாத சக்திகளுக்கு எதிராக மைத்திரி,ரணில் ஏன் தயக்கம்

wpengine

12ஆம் அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான விடுமுறை

wpengine