(அனா)
பிரதேசத்தில் நடைபெரும் அபிவிருத்தியில் அப்பகுதி மக்களின் கண்கானிப்பு இல்லாததால் அதிகமான ஊழல்கள் இடம் பெறுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளது என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவின் மக்கள் பங்களிப்புடனான திட்ட முன்மொழிவுகளை தயாரித்தல் மற்றும் கண்கானிப்புக்கான பொறிமுறையை ஏற்படுத்தல் தொடர்பான கூட்டம் நேற்று இரவு ஓட்டமாவடி பிரதேச சபை கேட்போர் கூடத்தில் இடம் பெற்ற போதே அவர் மேற் சொன்னவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்.
ஒரு பிரதேசத்திதை அபிவிருத்தி செய்தற்கு மேற்கொள்ளப்படும் வேலைகளை கொந்தராத்து எடுத்தவரால் முறையாக செய்யப்படாமல் இழுத்தடிப்புக்கள் இடம் பெறும் எப்போது வேலை ஆரம்பிக்கப்பட்டது எப்போது முடிவடையும் என்று அப்பகுதியில் உள்ளவர்களுக்குத் தெரியாமல் இருக்கும் அரசாங்கம் பணம் ஒதுக்கியுள்ளது அரசாங்க அதிகாரிகள் அதனை பார்த்துக் கொள்வார்கள் என்று இருப்பது பொதுமக்கள் செய்யும் தவராகும்.
அரசாங்க பணத்தில் இடம் பெறும் வேலைத்திட்டம் உரிய முறையில் இடம் பெறுகின்றது என்று பார்த்தால் அதில் பெரிய கேள்விக்குறியே உள்ளது இது தொடர்பாக பிரதேச மக்கள் ஒரு அமைப்பாக இயங்குவார்களாக இருந்தால் அரசியல்வாதிகளின் நிதி ஒதுக்கீட்டில் நடைபெறும் வேலைகளில் சரியான அபிவிருத்தியை காணமுடியும் என்று தெரிவித்தார்.
கோறளைப்பற்று பிரதேச சபை செயலாளர் எஸ்.எம்.சிஹாப்தீன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சு மற்றும் உள்ளுராட்சி கிராமிய அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் ஏ.எல்.எம்.அஸீஸ், கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் எம்.வை.எம்.சலீம், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் எம்.ஐ.அல் அமீன், உதவி திட்ட பணிப்பாளர் எஸ்.ஏ.றியாஸ் பிரதேச முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.