பிரதான செய்திகள்

மக்கள் உரிமைகளை பெற்றுக்கொடுக்காத விக்னேஸ்வரன், இரா.சம்பந்தன்

எதிர்கட்சித் தலைவரான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் உட்பட தமிழ் தேசியக் கூட்டமைப்பும், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் தங்களை பிரதிநித்துவம் செய்யும் மக்களுக்கு உரிமைகளை பெற்றுக்கொடுக்காமல் பதவிகளை தக்கவைப்பதற்கே முயற்சிப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரான முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் குற்றம் சுமத்தியுள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

தமிழ் மக்களின் பிரச்சினைக்காக குரல் கொடுக்காத எதிர்கட்சித் தலைவர் சம்பந்தன், ரணில் – மைத்திரி தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்தை தொடர்ந்தும் ஆட்சியில் வைத்துக் கொள்வதற்கான பிரயத்தனத்தில் ஈடுபட்டுள்ளார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில், அக்கட்சியின் தலைவரான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்தன உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர்.

அண்மையில் ஊடகங்களுக்கு முன்பாக கருத்து வெளியிட்டிருந்த சகவாழ்வு மற்றும் நல்லிணக்க அமைச்சர் மனோ கணேசன், எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் அமைச்சுப் பதவியொன்றை பெற்றுக்கொள்ள முன்வர வேண்டும் என்றும், அவ்வாறு முன்வரும்பட்சத்தில் தனது அமைச்சையே அவருக்கு வழங்கவும் தயாராக இருப்பதாக கூறியிருந்தார்.

எனினும் எதிர்க்கட்சித் தலைவராக தனது கடமைகளை செய்யத்தவறிவரும் இரா.சம்பந்தன் தற்போதும் ஓர் அமைச்சராகவே செயற்பட்டு வருவதாக பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

Related posts

செல்போனினால் உயிரை இழந்த இளம் வாலிபன்

wpengine

வவுனியாவில் 21 வயது இளைஞரின் சடலம் மீட்பு!

Editor

ரணில் விக்ரசிங்கவுக்கு எதிரான மனு நிராகரிப்பு

wpengine