பிரதான செய்திகள்

மக்கள் அனைவரும் சுதந்திரக் கனவை ஒன்றாகக் காண்போம்; ஜனாதிபதி

இலங்கையின் 77 ஆவது சுதந்திர தினம் இன்று கொண்டாப்படும் நிலையில், நாட்டில் சமூக, பொருளாதார மற்றும் கலாசார ரீதியான சுதந்திரத்தினை முழுமையாக வென்றெடுப்பதற்கான போராட்டத்தில் நாட்டின் அனைத்து இனத்தவர்களும் இணைந்து செயற்பட வேண்டிய தேவை உள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு – சுதந்திர சதுக்கத்தில் இன்று காலை இடம்பெற்ற நாட்டின் 77ஆவது சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்று உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டை பாதுகாத்து வளமானதாக மாற்றுவதற்கான பொறுப்பு உணவு உற்பத்தி செய்யும் விவசாயி முதல் நாட்டை காக்கும் முப்படையினர் வரை அனைவருக்கும் உள்ளது. நாட்டின் பொருளாதாரத்தைப் பலப்படுத்தும் சகல தொழிற்துறையினரும் இதில் பங்குதாரர்களாக உள்ளனர்.

எனவே நாட்டை பொருளாதார ரீதியில் சுதந்திரமானதாக மாற்றுவதற்கு இந்த நாட்டின் சகல பிரஜைகளும் ஒன்றிணைய வேண்டும் எனவும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இதன்போது தெரிவித்துள்ளார்.

Related posts

கம்பஹாவில் ஊரடங்குச் சட்டம்

wpengine

அமைச்சர் விஜயதாஸ ராஜபஷ்சவினை நீக்கிய ஜனாதிபதி

wpengine

சிறுவர் துஷ்பிரயோக வழக்குகள் சுமார் 40,000 நிலுவையில் – தீர்ப்பு வழங்குவதில் தாமதம் .

Maash