பிரதான செய்திகள்

மக்களை ஏமாற்றும் ரணில்,மைத்திரி

மக்களை ஏமாற்றுவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் நாடகமாடுவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ குற்றம் சுமத்தியுள்ளார்.

அம்பலாங்கொடயில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இதை குறிப்பிட்டார்.

தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் சண்டை பிடிப்பதைப் போல் நடிப்பதாகவும், தேர்தலுக்குப்பின் பழைய காதலர்கள் போன்று மீண்டும் ஒன்று சேர்வார்கள் எனவும் அமைச்சர் லக்ஷமன் கிரியெல்ல தெரிவித்த கருத்தை இதன்போது மஹிந்த ராஜபக்ஸ சுட்டிக்காட்டியுள்ளார்.

இவர்கள் போடும் நாடகத்திற்கு நாங்கள் ஏமாறமாட்டோம். ஜனவரி 8ஆம் திகதி விட்ட தவறுக்கு பெப்ரவரி 10ஆம் திகதி தீர்வு கிடைக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினரை அரசாங்கம் அமைக்க வருமாறு விடுத்த ஜனாதிபதியின் அழைப்பு இந்த அரசியல் நாடகத்தின் ஒரு பகுதியாகும்.

எமது வாக்குகளை உடைப்பதற்கும், ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்குகளை அதிகரிக்கச் செய்வதற்கும் எடுக்கும் நடவடிக்கையே இதுவாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

மதுஷ்வின் இலங்கை மற்றும் துபாயில் 23 வங்கிக் கணக்குகளில் 1000 கோடி

wpengine

உப தவிசாளர் பதவியை இராஜினாமா செய்யவுள்ள யூ.எல்.அஹமட் லெப்பை

wpengine

அகில இலங்கை மக்கள் கட்சியின் பேராளர் நாட்டில் இந்தியா அரசியல்வாதிகள்

wpengine