நாட்டிலுள்ள விற்பனை நிலையங்களில் பிளாஸ்டிக்கில் உற்பத்தி செய்யப்பட்ட அரிசி விற்பனை செய்யப்படுவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
நாட்டில் நிலவிய கடும் வறட்சி நிலையை அடுத்து, நிவாரணமாக வெளிநாடுகளால் வழங்கப்பட்ட அரசியில் இந்த மோசடி கண்டறியப்பட்டுள்ளது.
கொழும்பு புறக்கோட்டையில் விற்பனை செய்யப்பட்ட அரிசி வகை ஒன்று தொடர்பில் தற்போது சமூகவலைத்தளங்களில் சில காணொளிகள் வெளியாகியதையடுத்து இது பரவலாக பேச்பட்டு வருகின்றது.
பாஸ்மதி அரிசி கொள்வனவு செய்த பெண்ணொருவர் அதனை சமைத்த பின்னர் அதிர்ச்சியான சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. சோறு சமைத்து 24 மணித்தியாலங்கள் கடந்த பின்னரும் கெட்டு போகாமல் இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
அந்த அரிசியில் சமைத்த சோற்று உருண்டைகளை தரையில் அடித்த போதும் சிதறாமல் பந்து போன்று இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பிலான காணொளி ஒன்றையும் அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதேவேளை மாகும்புரவில் அரிசி கொள்வனவு செய்த நபர் ஒருவரும் இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.