மக்களுக்கு நன்மை பயக்கும் வகையில், வன ஜீவராசிகள், வன வள பாதுகாப்பு, சுற்றாடல், காணி உள்ளிட்ட அனைத்து திணைக்களங்களினதும் நிறுவனங்களினதும் சட்டங்களை வகுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
அரச நிறுவனங்களுக்கு எதிராக நீண்ட காலமாக வழக்குகளை சந்தித்து சிரமங்களை எதிர்கொண்டுள்ள மக்களுக்கு நிவாரணத்தைப் பெற்றுக்கொடுக்கும் வகையில் ஜனாதிபதி இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார்.
சிக்கல்கள் தீர்க்கப்பட்டு இறுதியாக தயாரிக்கப்பட்ட 17 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறுதிப் பத்திரங்களில் தான் நேற்று கையெழுத்திட்டதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
தனமல்வில – அளுத்வெவ குகுல்கட்டுவ குளக்கரையில் இன்று நடைபெற்ற கிராமத்துடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ஜனாதிபதி கலந்துகொண்டார்.
பதுளை மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட கிராமத்துடன் கலந்துரையாடல் நிகழ்ச்சித் திட்டத்தின் எட்டாவது அத்தியாயம் இதுவாகும்.