பிரதான செய்திகள்

மக்களின் பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்கும் அரசியல்வாதி அமைச்சர் றிஷாட்! சில அரசியவாதிகள் மீது கல்லெறிகிறார்கள்

(சுஐப் எம் காசிம்)

வட மாகாண அரசியல்வாதிகள் அத்தனை பேரிலும் ஆளுமையுள்ள அரசியல் தலைவராகவும் மக்களின் பிரச்சினைகளுக்காக துணிந்து குரல் கொடுப்பவராகவும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் திகழ்வதாலேயே அவர் மீது சிலர் கல்லெறிகின்றார்கள் என்று அமைச்சரின் மாந்தை மேற்கு பிரதேச இணைப்பாளரும் சமூக சேவையாருமான செல்லத்தம்பு தெரிவித்தார்.

மன்னார் நகர மண்டபத்தில், தேசிய இளைஞர்கள் சேவைகள் மன்றம் ஏற்பாடு செய்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“கடந்த அரசில் தமது அமைச்சுப் பதவிகளையும் தனக்கு வழங்கப்பட்ட வளங்களையும் தூக்கியெறிந்துவிட்டு தன்னந்தனியாகச் சென்று இந்த நல்லாட்சியைக் கொண்டுவருவதற்காக முதன் முதலாக நல்லாட்சித் தலைவர்களுடன் இணைந்தவர் அவரே!

துன்பத்திலே துவழும் எங்களை இன மத பேதமின்றி அரவணைத்து உதவி செய்து வருகின்றார். தான் பிறந்த மன்னார் மண்ணிற்கு அவர் அயராது பணிபுரிகின்றார். சொல்லும் செயலும் அவரிடம் ஒரே மாதிரியாகவே இருக்கின்றது. ஏனைய அரசியல்வாதிகளைப் போன்று வெறும் வார்த்தை ஜாலங்களால் அரசியல் நடத்துபவர் அல்லர்.

அவரது தூரநோக்கான அரசியல் செயற்பாடுகளைக் கண்டதனாலேயே காழ்ப்புணர்வு கொண்டவர்கள் இன்னும் கல்லெறிந்து வருகின்றனர் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய மன்னார் பிரதேச சபைச் செயலாளர் கே. எஸ். வசந்தகுமார் கூறியதாவது,

அமைச்சர் ரிஷாட் இந்தப் பிரதேசத்திலே அபிவிருத்தியை மேற்கொண்டு வருவது வெளிப்படையான உண்மை.

அரச அதிகாரிகளான நாங்கள் அவரது அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்கு பல்வேறு சவால்களுக்கும் கஷ்டங்களுக்கும்  முகங்கொடுக்க நேரிடுகின்றது. அவ்வாறான சிக்கல்களுக்கு மத்தியிலேயே தந்திரோபாய திட்டங்கள் மூலம் நாங்கள் அவற்றை முன்னெடுக்கின்றோம்.

அரச நிதியொதுக்கீட்டுக்கப்பால் அவரது பணி வியாபித்து நிற்கிறது.

இந்த மாவட்டத்திலே சிரேஷ்ட அமைச்சரான ரிஷாட்டுடன் ஏனைய அரசியல்வாதிகள் கை கோர்த்து ஒற்றுமையுடன் பணிகளை முன்னெடுத்தால் மன்னார் நகரம் புதுப்பொலிவு பெறும் என்றும் அவர் கூறினார்.unnamed-3

Related posts

பௌத்த துறவிகளாக துறவறம் பூண்ட தமிழ்ச் சிறார்கள்- (விடியோ)

wpengine

யாழ் மாவட்டத்தில் காத்திருப்போர் பட்டியலில் இருக்கின்றவர்களுக்கு 5000ரூபா கொடுப்பனவு

wpengine

வட கொரியாவுக்கு மிரட்டல் கொடுத்தால்! அமெரிக்காவுக்கு ஆபத்து ஹிலாரி

wpengine