நாட்டு மக்களின் வருமானத்தை அதிகரிக்கும் வேலைத்திட்டம் ஒன்றை மேற்கொள்ள வேண்டும். அத்துடன், வருமானத்தை அதிகரிக்காமல் நாட்டு மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முடியாது என்று வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ நேற்று (23) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியத்தின் நிவாரணம் தொடர்பாக பாராளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்….
எதிர்க்கட்சியினர் பொறுப்பை ஏற்க மறுத்தனர். பொருளாதாரத்தை நிர்வகிக்க முடியாது என்றார்கள். எல்லா பிரச்சனைகளுக்கு மத்தியிலும் நாம் பொறுப்பை ஏற்றுக்கொண்டோம். IMF திட்டத்திற்கு அனைத்து நாடுகளையும் இணைத்துக் கொண்டோம். அனைத்து நாடுகளுடனும் ஒருங்கிணைந்து செல்லும் வகையில் நமது கொள்கைகளை கடைபிடிக்க வேண்டும். நாம் கொள்கைகளை இழந்து விட்டோம். அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தியது. நாங்கள் நிதி ஒழுக்கத்தை ஏற்படுத்தினோம். வரிகளை குறைத்தோம். வருமானத்தை குறைத்தோம்.
மேலும், நாட்டுக்கு தேவையான வேலைத்திட்டத்தை ஆரம்பித்தோம். செலவை குறைக்கும் திட்டத்திற்கு செல்ல வேண்டியிருந்தது. இதன் பலனையே நாம் தற்போது அனுபவித்து வருகின்றோம். நாட்டில் ஏழைகள் உள்ளனர். அவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். நாட்டு மக்களின் வருமானத்தை அதிகரிக்கும் வேலைத்திட்டம் ஒன்றை மேற்கொள்ள வேண்டும். வருமானத்தை அதிகரிக்காமல் நாட்டு மக்களின் பிரச்சினை தீர்ந்து விடாது. எனவே, மக்களுக்கு வருமானத்தை அதிகரிக்கும் பொருளாதாரம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.