பிரதான செய்திகள்

மக்களின் எதிர்ப்பையும் போராட்டங்களையும் இந்தச் சட்டத்தின் மூலம் அடக்க முடியாது-எம்.ஏ.சுமந்திரன்

இலங்கையில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள அவசர கால சட்டத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உடனடியாக மீளப் பெற வேண்டும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

அரசுக்கு எதிரான மக்களின் எதிர்ப்பையும் போராட்டங்களையும் இந்தச் சட்டத்தின் மூலம் அடக்க முடியாது எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் எம்.பி. சுட்டிக்காட்டியுள்ளார்.

“இந்தத் தவறான நடவடிக்கையை நிராகரிக்குமாறு எனது சக நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கேட்டுக்கொள்கின்றேன்” எனவும் சுமந்திரன் எம்.பி. மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கை முழுவதும் அரசுக்கு எதிரான மக்களின் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன நிலையில் நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அவசரக்கால சட்டத்தை ஜனாதிபதி பிரகடனப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

தொழில் இல்லாதவர்களுக்கு உதவி செய்ய நடவடிக்கை

wpengine

அமைச்சர் றிஷாட் பதியுதீன் பான் கீ மூனை சந்தித்துப் பேச்சு

wpengine

தமிழ் டயஸ்போராக்களின் தாளத்துக்கு ஆடும் வட மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மின்

wpengine