பிரதான செய்திகள்

மக்களின் அபிலாசைகளை வெற்ற தலைவர் அமைச்சர் றிஷாட்

மக்களின் அபிலாசைகளை வெல்வதற்காக ரிசாட் பதியுதீன் பல மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டை மேற்கொண்டு உட்கட்டமைப்புக்களை விருத்தி செய்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் குறிப்பிட்டுள்ளார்.

கந்தளாயில் நேற்றிரவு நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கூறுகையில்,

சில முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் சுகபோகங்களை அனுபவித்து கொண்டு மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
அதனால் இம்முறை நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு மக்கள் தகுந்த பாடத்தினை காட்டுவதற்கான காலம் வந்துள்ளது.

இதேவேளை கந்தளாய் பிரதேசசபைக்கு இம்முறை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக ஏழு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவார்கள் என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

Related posts

கூட்டமைப்பு பிரிவினை வாதக்கருத்துக்களை விதைகின்றார்! கட்சிக்கு தடை தேவை

wpengine

கிழக்கு மாகாண முஸ்லிம் அளுநர் நியமனம்! இனவாதம் பேசும் அரியநேத்திரன்

wpengine

கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட காரணங்களினால் இந்த நிலைமை தொடரும் என்பதை நான் அறிவேன்

wpengine