Breaking
Sun. Nov 24th, 2024
(அஷ்ரப் ஏ சமத்)
தமிழ் மிரா் பத்திரிகையின் ஆசிரியா் ஏ.பி மதன் தணிக்கை தகா்க்கும் தணிக்கை எனும் பெயரில் தமிழ் மிராில் 2015-2017ஆண்டுவரை  எழுதிய 100 ஆசிரிய தலையங்கள் அடங்கிய நுால்  ஒன்று நேற்று(17) கொழும்பு தபாலக கேட்போா் கூடத்தில்  சிரேஷ்ட ஊடகவியலாளா் ந. வித்தியாதரன் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க கலந்து கொண்டு நுாலினை வெளியீட்டு வைத்தாா். அத்துடன் நுாலின் பிரதிகள் அரசியல்வாதிகள் பத்திரிகையாசிரியா்கள். இலக்கியவாதிகள், ஊடகவியலாளா்களுக்கும் வழங்கி வைக்கப்பட்டது.  இந் நிகழ்வில் எதிா்கட்சித் தலைவா் சாா்பில் பாராளுமன்ற உறுப்பினர் எம். சுமந்திரன், அமைச்சா் காளான மனோகனேசன், ரவுப் ஹக்கீம் கலந்து கொண்டனா்.

ஏற்கனவே தமிழ் பத்திரிகைகளின் ஆசிரியா் தினக்குரல் வீ. தனபாலசிங்கம், மற்றும் வீரகேசரி ஆசிரியா் பிரபாகரன் ஆகியோரது ஆசிரியத் தலையங்கள் கொண்ட நுால்கள் வெளிவந்திருக்கின்றன.  அவை தவிர என் எழுத்தாயுதம் எனும் தலைப்பில் வித்தியாதரனின் நுால் தொகுப்பும் வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இங்கு உரையாற்றிய பிரதம மந்திரி;

முன்னைய ஆட்சிக்காலத்தில் தமிழ் மிரா் மதன்  இவ்வாறு ஆசிரிய தலைங்கள் எழுதியிருந்தால்  இன்று அவா் இவ்விடத்தில் இருந்திருக்க மாட்டாா். அவா்கள் காலத்தில் மக்களது பிரச்சினைகளை உண்மைகளை எழுதும் தமிழ் சிங்கள ஊடகவியலாளா்கள் கொலை செய்யப்பட்டுள்ளாா்கள். காணாமல் போகியுள்ளனா்.  
இந்த நாட்டில் 9 மாகாணசபைகள் உள்ளன. தெற்கில் உள்ள 7 மாகாணசபைகளது முதலமைச்சா்கள் உறுப்பிணா்கள் சிங்களவா்கள் அவா்களே மாகாணசபைகளுக்கு கூடிய அதிகாரங்கள் கேட்கின்றனா். அவா்களும் தேசத் துரோகிகளா? என கேட்க விரும்புகின்றேன். நாம் நமது அதிகாரங்களை பரவலாக்க எடுக்கும் முயற்சிக்கு கூட்டு எதிா்கட்சியினா் முட்டுக்கட்டை விதிக்கின்றனா். இந்த நாட்டில் பொளத்த மதம் அழிந்து விடும் என்று பொய்ப்பிரச்சாரங்களை செய்கின்றனா்.  என பிரதம மந்திரி அங்கு உரையாற்றினாா்.
vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *