பிரதான செய்திகள்

மகிந்த பிழையென்றால் பொங்கி எழுவீர்கள்! உங்கள் தலைவன் பிழை செய்யதால் ஏன்? மௌனம்

கடந்த மாகாண சபைத்தேர்தலில் இரு வேற்றுத்தலைவர்கள் தயவின் பேரில் தடம் பதித்த தயாளர்கள் இருவர். அவரில் ஒருவர் தேசிய காங்கிரஸின் மாகாணசபை உறுப்புரிமையை தலைவர் அதாவுல்லா அறிமுகம் செய்த கெளரவ மாகாணசபை உறுப்பினர் ஆரிப்சம்சுதீன். மற்றயவர் ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அறிமுகம் செய்த கெளரவ மாகாணசபை உறுப்பினர் ஷிப்லி பாரூக். இவர்கள் இருவரிடமும் உள்ள பல ஒற்றுமைகள் இருக்கின்றன. அவற்றில் முகன்மையானது  மாற்றுக்கட்சியில் மக்கள் பிரதினிதியாகி ஒரே கட்சியில் சங்கமித்தமையாகும்.

இவர்கள் இருவரும் கொடுங்கோலன் மகிந்தவின் முஸ்லிம்களுக்கு எதிரான கொடுமைகள் பொறுக்க முடியாவண்ணம் முஸ்லிம் காங்கிரஸில் சங்கமமானவர்கள். ஆரிப் சம்சுதீனைப் பொறுத்த வரையில் கடந்த ஜனாதிபதி தேர்தலிலே மகிந்தவைவைப் பொறுக்காது மைத்திரியை மைபூசி வரவழைத்தவர். அதற்காக அவர் முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து கொண்டார்.இதே போன்றே ஷிப்லி பாரூக்கும் ஹிஸ்புல்லா மற்றும் றிசாட் நாமமே வரம் என மொழிந்திருந்துவிட்டு ஈற்றில் மகிந்தரைக் காரணம்காட்டி வளர்த்துவிட்டோர்மீது சேற்றைப்பூசி காத்தாங்குடியில் மங்கிமறைந்த ஆதவனுக்கு ஒளியூட்டும் நோக்கில் இணைந்து கொண்டார்.

மகிந்தரை, அவருடைய சர்வாதிகாரத்தினை, அவருடைய அணுகுமுறையை, அவருடைய அடக்குமுறையைப் பிழைகண்டு ஆட்சி மாற்றத்தின் பங்காளிகளான இருவரும் இன்று அவர்கள் சார்ந்திருக்கும் மு.கா வுக்குள் தலைவர் ஹக்கீமை, அவருடைய சர்வாதிகாரத்தினை, அவருடைய புதிய யாப்பினை, அவருடைய நடத்தையை, அவருடைய அணுகுமுறையைக் கண்டும் பொங்கியெழாததன் மர்மம் தான் என்னவோ?

பதவியாசைகள் பட்டம் பரிவாரங்கள் மாலை மரியாதைகள் அனைத்தும் உங்கள் கண்களை மறைக்கின்றதா? ஹசனலியினை ஹக்கீம் இரண்டு ரக்காத் சுன்னத்துத் தொழுது விட்டு வந்து வாக்குறுதியளித்து நிறைவேற்றவில்லையாமே! முனாபிக் தனமாக நடந்து கொண்டாராமே!!அழுதார் கூட்டத்தில் கட்சியை வளர்த்தெடுக்கப்பாடுபட்ட ஹசனலி. இது உங்கள் கண்களுக்கு அநியாயமாகப்படவில்லையா? கட்சியின் சகல அதிகாரங்களையும் கையகப்படுத்தி “வன் மேன் ஆர்மியாக” தலைவர் வலம் வருகிறாரே..! நியாயமாகப் படுகிறதா? உங்கள் மனச்சாட்சிகள் இடம் தருகின்றனவா?

மகிந்தர் பிழையென்றால் பொங்கி எழுவீர்கள். உங்கள் தலைவர் பிழையென்று கண்ணால் கண்டாலும் ஊர் கூடிச் சொன்னாலும் கண்டுகொள்ள மாட்டீர்கள். மங்கி மறைவீர்கள்.  ஆக மொத்தத்தில் எல்லாம் அரசியல் தானா?மாகாண சபை உறுப்பினர்களே மஃசரைத்தான் மறந்துவிட்டு மாறு செய்தீர்கள் செய்கிறீர்கள். மக்கள் மன்றத்தையுமா? விரைவில் மனம் மாறுங்கள். உங்கள் மனம் மாற நாங்களும் இறைவனை இரஞ்சுகிறோம்.

Related posts

கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்!

Editor

கொழும்பு மாநகரில் 1355 டெங்கு நோயாளர்கள்.!

wpengine

கடற்கரையோர பிரதேசங்களை தூய்மைப்படுத்தும் நடவடிக்கை மன்னாரில்

wpengine