Breaking
Sun. Nov 24th, 2024

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தலுக்கான பணிகள் மிக மும்மரமாக நடைபெற்றுவருகின்றது. அந்த வகையில் முன்னால் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னனி எனும் தேசியக்கட்சியானது நாடுமுழுவதுமான தேர்தல் தொகுதிகளில் தனித்தும், கூட்டாகவும் தாமரை மொட்டு சின்னத்தில் போட்டியிடுகின்றது.

அந்தவகையில் யாழ்மாவட்ட அமைப்பாளர் தம்பிதுரை ரஜீவ் இன் தலைமையில் யாழ்மாவட்ட தேர்தல் தொகுதிகளில் போட்டி இடுவதற்கான வேட்புமனுக்கள் தாக்கள் செய்தும், கட்டுப்பணம் செலுத்தியும் உள்ளது. இளமையான துடிப்பான தனது மக்களுக்கு ஏதேனும் நன்மை செய்வதனூடாக தனது பிறப்பினை அர்த்தபூர்வமாணதாக்கும் நோக்குடைய பல வேட்பாளர்கள் ஆர்வத்துடன் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னனியினை பிரதிநிதித்துவப்படுத்தி தேர்தல் களத்தில் குதித்துள்ளனர்.

அந்தவகையில் முன்னுதாரணமாக பருத்தித்துறை நகரசபையின் தலைமை வேட்பாளர் வானதி ஸ்ரீகணேசன் (வைத்தியர் – ஆயுள்வேதம்) தலைமையில் நகரசபை வேட்பாளர்கள் நேற்று 11.12.2017 திங்கட்கிழமை தமது தலைமைகளான முன்னால் ஜனாதிபதி மகிந்தராஜ பக்ஷ மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னனியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ ஆகியோரை சந்தித்தனர்.

தமது சபைக்கு உட்பட்ட மக்கள் சார்பாக தமது விருப்புக்கள் மற்றும் எதிர்பார்ப்புக்கள் என்பவற்றை மிகவும் ஆணித்தரமான முறையில் தெரிவித்து அர்த்தபூர்வகாக கலந்துரையாடலை மேற்கொண்டனர்.

தாம் தேர்தலில் நிற்பதன் நோக்கம் பருத்தித்துறை நகரசபையை சார்ந்த மக்களுக்கு தங்களாலான உதவிகளை செய்து அவர்களை செழுமைப்படுத்துவதனூடாக ஆரோக்கியமான சமுதாயத்தை கட்டிஎழுப்புவதே ஆகும் என்றும் இத்தகைய இலக்குக்கு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னனி எவ்வாறான ஒத்துழைப்பை வழங்கும் என்றும், அபிவிருத்திகள், வேலையில்லா பிரச்சனைகள், வீடற்றோருக்கான வீட்டுதிட்டம், காணிகள் அற்றோருக்கான ஏற்பாடுகள், மக்களின் அடிப்படைப்பிரச்சனைகள், மற்றும் கல்விசார் விருத்திகள் என்பவற்றுக்கு தங்காளிடமிருந்து எவ்வாறான வாக்குறுதிகள் வழங்க முடியும் வினவினர்.

தமிழ்மக்களை நாம் மிகவும் புரிந்துவைத்துள்ளோம், அவர்களை செழுமைப்படுத்துவதற்காக பல அபிவிருத்தி திட்டங்களை நாம் செய்து காண்பித்திருக்கின்றோம் அத்தோடு நாம் ஆரம்பித்த பல திட்டங்காள் இன்றும் கிடப்பில் போடப்பட்டு கிடக்கின்றது. இவை எமக்கு வருத்தத்தை தருகின்றது. நிச்சயமாக மிகவிரைவில் மகிந்தராஜபக்ச ஜனாதிபதியாக மக்களால் ஆக்கப்படுவார் மீண்டும் மக்களுக்கான பணிகளை அவர் தலைமையில் நாங்கள் அனைவரும் இணைந்து முன்னெடுத்துச் செல்வோம்.

தேர்தலில் வெற்றி பெற்றுவது மாத்திரமல்லாது நீங்கள் பிரதினிதித்துவப்படுத்தும் சபையை முன்மாதிரியான, எடுத்துக்காட்டான சபையாக ஆக்குவதற்கு நீங்கள் அனைவரும் அயராது பாடுபடுதல் வேண்டும் உறுதுணையாக நாங்கள் உங்களுடன் எப்பொழுது இருப்போம் உங்கள் கோரிக்கைகள் நிச்சயமாக நிறைவேற்றப்படும் என்று அவர் உறுதியளித்தார்.

அண்ணளவாக 1மணித்தியாளங்கள் வரை நீடித்த இக் கலந்துரையாடல் மிக ஆரோக்கியமாகவும் வெற்றிகரமாகவும் நிறைவுற்றதை தொடர்ந்து.

முன்னால் ஜனாதிபதி மகிந்தராஜ பக்சவை சந்திப்பதற்காக கண்டிவரை சென்றது. குழுவின் வருகைகாக காத்திருந்த மகிந்தராஜ பக்ச குழுவிற்கு உற்சாகமன வரவேற்பினை அளித்தார். தொடர்ந்தும் குழு முன்வைத்த கோரிக்கைகளை அவதானமாக செவிமடுத்தது மாத்திரமல்லாது தனது வாக்குறுதிகளையும் வழங்கினார். தொடர்ந்தும் வெற்றிக்கான வாழ்த்துக்களை பெற்றுக்கொண்ட குழு உத்வேகத்துடன் தேர்தல் பணிகளில் முழுமையாக தம்மை ஈடுபடுத்தியுள்ளது.

பதவி ஆசைகளுடன் மக்களுக்கு பொய் வாக்குறுதிகாளை வழங்கி வெற்றிக்கு பின்னர் தமது சுயனலங்களை நிறைவுசெய்துகொண்டு சுக போகம் அனுபவிக்க துடிக்கும் பல வேட்பாளர்கள் மத்தியில். மக்கள் சேவையையே தம் இலட்சியமாக கொண்ட இத்தகைய வேட்பாளர்கள் நிச்சயமாக காலத்தின் தேவையானவர்களே.

 

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *