பிரதான செய்திகள்

மகிந்தவின் குடும்பத்துடன் சங்கமித்த மின்னல் ரங்கா

அபிவிருத்தி வழிமுறைகள் மற்றும் சர்வதேச வர்த்தகத்துறை இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க, நேற்றிரவு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்துள்ளார்.

 

ராஜபக்சவின் இளைய சகோதரியின் மரணத்திற்கு பின்னர் நடைபெற்ற 7ம் நாள் சமய நிகழ்வில் கலந்து கொள்ள சென்றிருந்த சேனசிங்க, முன்னாள் ஜனாதிபதியுடன் நட்புறவாக பேசி கருத்துக்களை பரிமாறிக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

நீண்ட நேரம் வீட்டில் இருந்து விட்டே இராஜாங்க அமைச்சர் திரும்பிச் சென்றுள்ளார்.

மகிந்த ராஜபக்சவின் சகோதரின் வீட்டுக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீரங்கா, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச உட்பட பலர் சென்றிருந்தனர்.

ஜே. ஸ்ரீரங்கா, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் குடும்பத்துடன் மிக நெருக்கமான நபர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

வவுனியா பசார் வீதி கடைத்தொகுதியில் ஒரு குடும்பஸ்தரின் சடலம் .!

Maash

கட்டுரைப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற முர்சிதா செரீன்

wpengine

2000ரூபா கிடைக்காதவர்கள் முறைப்பாடு செய்ய முடியும்.

wpengine