அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

மகிந்தவின் உயிருக்கு பொறுப்பு கூறுவது யார் ?

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் (Mahinda Rajapaksa) உத்தியோகபூர்வ இல்லம் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவரது உயிருக்கு ஏற்படும் அச்சுறுத்தலுக்கு அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் (Sagara Kariyawasam) தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே இவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, அரசாங்கம் உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட்டால், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேற தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

அத்தோடு, நல்லாட்சி அரசாங்கத்தால் மகிந்த ராஜபக்சவுக்கு உரிய இல்லம் உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டுள்ளதால், அதிலிருந்து வெளியேற விரும்பினால் அதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அப்படி ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டால், மகிந்த ராஜபக்ச ஒரு கணம் கூட அங்கே தங்க மாட்டார் என்றும், அது குறித்து இங்கும் அங்கும் அறிக்கைகளை வெளியிடுவதில் எந்த அர்த்தமும் இல்லை என்றும் சாகர காரியவசம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

அமைச்சர் றிஷாட் விடயத்தில் சாய்ந்தமருது மக்களின் மெத்தப்போக்கு

wpengine

ஊடகங்களினுடாக வெளி வந்துள்ள செய்தி உண்மைக்குப் புறம்பானது றிப்ஹான்

wpengine

பதவிகளை தூக்கியெறிந்துவிட்டு முடிவுகளை எடுப்பதற்கு நாங்கள் ஒருபோதும் பின்நிற்கப்போவதில்லை

wpengine