பிரதான செய்திகள்

பௌத்த சாசன அமைச்சுக்கு பொறுத்தமானவர் ஜனாதிபதி தான் தேரர்கள் கோரிக்கை

பௌத்த சாசன அமைச்சு ஜனாதிபதியின் கீழ் கொண்டு வரப்பட வேண்டுமென மாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மூன்று பீடங்களையும் பிரதிநிதித்துவம் செய்யும் மாநாயக்க தேரர்கள் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

பௌத்த மத விவகாரங்களில் சிரத்தையுடன் செயற்பட்ட விஜயதாச ராஜபக்ச அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில் அந்த அமைச்சின் பொறுப்பினை ஏற்றுக்கொள்ள மிகவும் தகுதியானவர் ஜனாதிபதி மட்டுமே என தெரிவித்துள்ளனர்.

எனவே ஜனாதிபதி பௌத்த சாசன அமைச்சுப் பொறுப்பினை ஏற்றுக்கொள்ள வேண்டுமென மூன்று பீடங்களினதும் மாநாயக்க தேரர்கள் விரும்புகின்றனர் என அஸ்கிரி பீடத்தின் பதிவாளர் நாயகம் கலாநிதி மெதகம தம்மானந்த தேரர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகமொன்றுக்கு அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,

இலங்கையின் சனத்தொகையில் நூற்றுக்கு 75 வீதமானவர்கள் பௌத்தர்களாவர். பௌத்த மதத்தை பாதுகாப்பது சுலபமான விடயம் கிடையாது. விஜயதாச ராஜபக்ச இந்தப் பணியை செவ்வனே மேற்கொண்டு வந்தார்.

பௌத்த சாசன அமைச்சின் அதிகாரிகள் நினைத்தவாறு தீர்மானம் எடுக்கவோ அல்லது ஒவ்வொரு தனிப்பட்ட நபர்களுக்கு தேவையான வகையில் செயற்படுவதற்கு இடமளிக்காது அமைச்சின் சகல அதிகாரங்களும் ஜனாதிபதியின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும் என தம்மானந்த தேரர் தெரிவித்துள்ளார்.

Related posts

மாவட்ட முச்சக்கரவண்டி சங்கங்களை புனரமைக்கும் நடவடிக்கை விரைவில் – போக்குவரத்து அமைச்சர் டெனிஸ்வரன்

wpengine

சமூக வலைத்தளங்கள் மீதான தடை மக்கள் மத்தியில் சந்தேகம் மஹிந்த

wpengine

ரணிலின் திட்டத்தை ரத்துசெய்த மைத்திரி! பிரயோசனமில்லை

wpengine