பிரதான செய்திகள்

பௌத்தர்களின் உரிமைகளை பாதுகாக்க பொதுபல சேனா, ராவனா பலய மற்றும் சிங்கள ராவய

சிங்கள பௌத்த அமைப்புக்கள் மூன்று இணைந்து கூட்டணி ஒன்றை அமைத்துக் கொண்டுள்ளன.

சிங்கள பௌத்த மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்க உருவாக்கப்பட்ட மூன்று அமைப்புக்கள் இவ்வாறு கூட்டணி அமைத்துள்ளன.

பொதுபல சேனா, ராவனா பலய மற்றும் சிங்கள ராவய ஆகிய மூன்று அமைப்புக்களும் நேற்று இந்த கூட்டணியை அமைத்துக் கொண்டுள்ளன.

சிங்கள பௌத்தர்களின் உரிமைக்காக விரிவான அடிப்படையில் குரல் கொடுப்பதே இந்த கூட்டணியின் நோக்கம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் காலங்களில் இந்த அமைப்புக்கள் கூட்டாக இணைந்து செயற்பட உள்ளதாக பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

Related posts

சாய்ந்தமருது கபீரின் மறைவுக்கு, அமைச்சர் றிசாத் பதியுதீன் அனுதாபம்

wpengine

கிழக்கில் சாணக்கியனும் வடக்கில் சுமந்திரனும் பெரிய போராட்டங்களை செய்து படம் காட்டினார்கள்

wpengine

றிஷாட் மீது போலிகளை பேசும் ஹக்கீம்,சிங்கள இனவாதம்

wpengine