செய்திகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்திமன்னார்

போலீசாரை மோதி செல்ல முட்பட்ட டிப்பர் மீது துப்பாக்கிச்ச்சூடு..!

மன்னார் அடம்பன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பள்ளமடு பகுதியில் சட்ட விரோதமாக மணல் மண் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனத்தை கடமையில் ஈடுபட்டிருந்த அடம்பன் பொலிஸார் இடை மறித்த போது  சமிக்கை கட்டமைப்பை மீறி  பொலிஸார் மீது வாகனத்தால் மோதிச் செல்ல முற்பட்ட போது குறித்த டிப்பர் வாகனத்தை நோக்கி பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர்.

குறித்த சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை (20) அதிகாலை மன்னார் அடம்பன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பள்ளமடு பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த துப்பாக்கிச் சுட்டு சம்பவத்தை தொடர்ந்து போது குறித்த டிப்பர் வாகனம் நிறுத்தப்பட்டது.

இதன் போது குறித்த டிப்பர் வாகனத்தில் சட்ட விரோதமான முறையில் ஏற்றிச் செல்லப்பட்ட மண் மற்றும் உபகரணங்கள் காணப்பட்டதோடு அவை மீட்கப்பட்டதாக அடம்பன் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் குறித்த டிப்பர் வாகனத்தின் சாரதி மற்றும் உதவியாளர் அடம்பன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இரு நபர்கள் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சன்னார் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் எனவும், கைது செய்யப்பட்ட நபர்கள் அடம்பன் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுளள்தோடு, மீட்கப்பட்ட பொருட்களும் அடம்பன் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.

மேலதிக விசாரணைகளை அடம்பன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

அமைச்சரவை மாற்றம் குறித்து ஜனாதிபதியும் பிரதமரும் கலந்துரையாடல்-எஸ்.பி

wpengine

முஸ்லிம் ஆன்மீகத் தலைவர் தைக்கா அஹமத் நஸீம் அவர்கள் பிரதமருடன் சந்தித்தார்.

wpengine

வவுனியாவில் புதுவருட வியாபாரம் பாதிப்பு

wpengine