தொழில்நூட்பம்பிரதான செய்திகள்

போலி பேஸ்புக் பாவனையாளருக்கு எச்சரிக்கை

இலங்கையில் பேஸ்புக் பயன்படுத்துவோருக்கு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த மாதத்தில் மாத்திரம் பேஸ்புக் தொடர்பாக 250 முறைப்பாடு கிடைத்துள்ளதாக கணனி அவசர பிரிவின் பாதுகாப்பு பொறியியலாளர் ரொஷான் சந்திர குப்தா தெரிவித்துள்ளார்.

பேஸ்புக் பயனர்கள் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தங்கள் புகைப்படங்களை பேஸ்புக்கில் வெளியிடும் போது ‘நண்பர்கள் மட்டும்’ பிரிவின் கீழ் வெளியிடுமாறு அவர் கேட்டு கொண்டுள்ளார்.

பேஸ்புக் பயனர்கள், தனிப்பட்ட முறையில் அறியப்பட்டவர்களிடமும், அறியப்படாதவர்களிடமும் இருந்து வரும் நட்பு கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வது தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும் என்பதை மனதில் வைத்து கொள்ள வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த வருடம் டிசம்பர் மாதம் போலி பேஸ்புக் கணக்கு தொடர்பில் 3400 முறைப்பாடுகள் இலங்கை கணனி அவசர பிரிவிற்கு கிடைத்துள்ளது.

தங்கள் சொந்த படங்களை வேறு நபர்கள் தவறாக பயன்படுத்தி போலி கணக்குகள் திறந்துள்ளதாகவே அதிக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வருடத்தில் 80 சதவீதமான போலிக் கணக்குகளை பேஸ்புக் தலைமையம் முடக்கியுள்ளதாக கணனி அவசர பிரிவின் பாதுகாப்பு பொறியியலாளர் ரொஷான் சந்திர குப்தா மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

Emerging Hidayans அமைப்பின் சிறுவர் விளையாட்டு போட்டியும் ஒன்றுகூடலும்.

wpengine

மன்னாரில் மீட்கப்பட்ட கேரள கஞ்சா பொதிகள் சுமார் 2 கோடி ரூபாய்

wpengine

கொங்கிரீட் வீதி அமைப்பதற்காக இடங்களை பார்வையிட்ட அமீர் அலி

wpengine