தொழில்நூட்பம்பிரதான செய்திகள்

போலி பேஸ்புக்களுக்கு வரப்போகும் ஆப்பு

பேஸ்புக்கில் உள்ள போலி கணக்குகளை கண்டறிந்து அகற்றும் பணி தொடங்கியுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

சமூக வலைத்தளங்களில் பேஸ்புக், டிவிட்டருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

பேஸ்புக்கில் பலர் கணக்குத் தொடங்கி தங்கள் கருத்துக்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.

இதில் போலி கணக்கு வைத்துள்ளவர்கள் தவறான தகவலை பரப்புவதாகவும் கடந்தாண்டு நடந்த அமெரிக்க‌ அதிபர் தேர்தலில் இது தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும் பேஸ்புக் நிறுவனம் மீது புகார்கள் கூறப்பட்டிருந்தன.

இதையடுத்து, பேஸ்புக்கில் போலி கணக்குகளை கண்டறிந்து அகற்றும் பணியை அந்நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

பேஸ்புக் ‌நிறுவனத்தின் பயனாளி‌கள் பாதுகாப்பு பிரிவு தலைவர் ஷப்னம் ஷேக் இதை தெரிவித்துள்ளார்.

நவீன யுக்திகள் மூலம் போலி கணக்குகள் கண்டறியப்பட்டு வருவதாகவும் பிரான்ஸ் நாட்டில் இம்முறையை பயன்படுத்தி 30 ஆயிரம் போலி கணக்குகள் ‌அகற்றப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

மன்னாரில் 148 மனித உடல்களின் எலும்புகள்

wpengine

77 ஆவது சுதந்திரதின நிகழ்வு மன்னார் மாவட்ட செயலகத்தில் சிறப்பாக நடைபெற்றது!!!

Maash

அபகரிக்கப்பட்டுள்ள தமிழர் பிரதேச காணிகள் : விடுவிக்க கோரிக்கை விடுத்த ரவூப் ஹக்கீம்..!

Maash