Breaking
Fri. Nov 22nd, 2024

வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் இருந்து சேவையில் ஈடுபடுவது தொடர்பில் இ.போ.ச.  ஊழியர்கள் கடந்த 4 நாட்களாக மேற்கொண்டு வந்த பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் இன்று மதியம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ள போதிலும் தனியார் மற்றும் இ.போ.ச.வினருக்கிடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

 

புதிய பேரூந்து நிலையத்திலுள்ள இரு கட்டிடத்தொகுதிகளில் தமக்கு ஒரு கட்டிடத்தொகுதியை வழங்குமாறும் அவ்வாறு வழங்கப்படும் பட்சத்தில் புதிய பேரூந்து நிலையத்தில் இருந்து சேவையினை முன்னெடுப்பதாகவும் தெரிவித்ததன் அடிப்படையில் தேசிய போக்குவரத்து அதிகார சபையின் அதிகாரிகள் தனியார் மற்றும் இ.போ.ச. ஊழியர்களுடன் கலந்துரையாடி பேரூந்து நிலையத்தின் முதலாவதாக கட்டிடத் தொகுதியை இ.போ.ச.வினருக்கு வழங்கியிருந்தனர்.

இதன் அடிப்படையில் வட மாகாணம் முழுவதுமாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் இன்று தமது பணிபகிஷ்கரிப்பை கைவிட்டு பணிக்கு திரும்பியிருந்தனர்.

இந் நிலையில் இன்று மாலை 3 மணியில் இருந்து தமது சேவையினையும் அவர்கள் முன்னெடுத்திருந்தனர்.

எனினும் வெளி மாகாணங்களுக்கடையிலான பேரூந்துகள் புதிய பேரூந்து நிலையத்தினுள் உள் நுழையமுடியாது என உடன்பாட்டுக்கு வந்திருந்தபோதிலும் இலங்கை போக்குவரத்து சபையினர் வெளிமாவட்டத்தில் இருந்து மாகாணங்களுக்கடையில் சேவையில் ஈடுபடும் பேரூந்துகளை புதிய பேரூந்து நிலையத்தினுள் கொண்டு வந்து நிறுத்தி பயணிகளை ஏற்றியமை மற்றும் ஒரே வழித்தடத்தில் பயணிக்கும் பேரூந்துகளுக்கு போட்டியாக தமது பேரூந்துகளை செலுத்தியமையினால் தனியார் மற்றும் இ.போ.ச.வினருக்கிடையில் முறுகல் நிலை ஏற்பட்டிருந்தது.

இதனையடுத்து பொலிஸார் வரவழைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *