பிரதான செய்திகள்

போதை மாத்திரைகளுடன் முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர் ஏத்தாலையில் கைது

டெமடோல் மாத்திரைகள் 600 ஐ விற்பனைக்காக வைத்திருந்த நபர் ஒருவர் கற்பிட்டி, ஏத்தாலே பிரதேசத்தில் வைத்து பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டு நுரைச்சோலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக அறியமுடிகின்றன.

கற்பிட்டி, ஏத்தாலே பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் போதைப் பொருள் வர்த்தகத்துடன் சம்பந்தப்பட ஒருவர் என்பதுடன், கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளதுடன், நுரைச்சோலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Related posts

யூரியா உர மூடையின் விலை 7500 ரூபா குறைப்பு

wpengine

உயிரிழந்தவர்களுக்கு மன்னார் மாவட்ட செயலகத்தில் அஞ்சலி

wpengine

உள்ளுராட்சிமன்ற தேர்தலை உடனடியாக நடத்துமாறு கோரிக்கை

wpengine