செய்திகள்பிரதான செய்திகள்

போதை பொருளுக்கு பணம் கொடுக்க மறுத்ததால் தாயை கொலை செய்த மகன் .

போதைப்பொருளுக்கு அடிமையான ஒருவர் தனது தாயைக் கொலை செய்த சம்பவம் ஒன்று கொழும்பு – தெமட்டகொட பகுதியில் பதிவாகியுள்ளது.

போதைப்பொருளைக் கொள்வனவு செய்வதற்குப் பணம் கொடுக்க மறுத்ததால் இந்த நபர் தாயை தாக்கி கொலை செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் உயிரிழந்தவர் தெமட்டகொட பகுதியைச் சேர்ந்த 68 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

இறந்த பெண்ணின் மகன் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என்றும்,இதன் காரணமாக அவர்களுக்கு இடையில் அடிக்கடி வாக்குவாதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Related posts

அமைச்சர் றிஷாட்டிற்கு எதிராக வாக்களிக்க வேண்டும் சில சிங்களவாதிகள் அழுத்தம்

wpengine

27ஆம் திகதிவரை விடுமுறைக் காலப் பகுதி அல்ல

wpengine

அமெரிக்காவின் முதல் முஸ்லிம் பெண் மர்மமான முறையில் கொலை

wpengine