பிரதான செய்திகள்பிராந்திய செய்தியாழ்ப்பாணம்

போதையில் கிணற்றில் தவரி விழுந்து 2 பிள்ளைகளின் தந்தை பலி..!

யாழ்ப்பாணம் மானிப்பாய் தெற்கு பகுதியில், கசிப்பு அருந்திய நிலையில் கிணற்றருகே படுத்துறங்கிய 2 பிள்ளைகளின் தந்தையொருவர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

மானிப்பாய் தெற்கு, மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த கணேசராசா சுபாகரன் என்ற 2 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

(29) திகதி கசிப்பு குடித்துவிட்டு கிணற்றுக்கு அருகே படுத்துறங்கிய நபர் ஒருவர் கிணற்றில் விழுந்து உயிரிழந்தார். இவர் கடந்த 29ஆம் திகதி வீடு ஒன்றிற்கு சென்று சகிப்பு குடித்துள்ளார்.

பின்னர் வீட்டுக்கு சென்றுவிட்டு மீண்டும் அந்த வீட்டுக்கு கசிப்பு குடிக்க சென்றுள்ளார்.

அந்த வீடு பூட்டியிருந்தது. இந்நிலையில் குறித்த நபர் அந்த வீட்டுக்கு முன்னால் உள்ள பழைய கிணற்றுக்கு அருகாமையில் உறங்கியுள்ளார்.

இவ்வாறு உறங்கியவர் திடீரென கிணற்றினுள் விழுந்துள்ளார். பின்னர் உறவினர்கள் அவரை தேடியவேளை (30) திகதி கிணற்றில் சடலமாக காணப்பட்ட நிலையில் மீட்கப்பட்டார்

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Related posts

சுதந்திர தினத்தில்! காஷ்மீரில் கீழே விழுந்த தேசிய கொடி

wpengine

இழப்பீடுகள் அலுவலக உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பங்கள் கோரல்…

Maash

விடத்தல்தீவில் நவீன வீடமைப்புத் திட்டம் அமைச்சர் றிஷாட் அங்குரார்ப்பணம்

wpengine