Breaking
Mon. Nov 25th, 2024

ரஷ்யாவில் போதைப்பொருள் விற்பனை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றது.  அதையும் மீறி விற்றால் அவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படும்.

இந் நிலையில், மைக்கேல் டிராவிஸ் என்ற அமெரிக்க மருத்துவர் ஒருவர் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுவதாக பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது. 

இது தொடர்பில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டதில் அவர் மெபேட்ரோன் என்ற உயர்ரக போதைப்பொருளை விற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, பொலிஸாரால் மைக்கேல் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

இந்த குற்றச்சாட்டு உறுதியாகும் பட்சத்தில் மைக்கேலுக்கு 20 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

A B

By A B

Related Post