யாழ் மாவட்டத்தில் உடுவில் பிரதேச செயலாளர் பிரிவின் J/182,183,184,187 ஆகிய பிரிவுகளில் பாடசாலை மாணவர்கள் பலரும் கஞ்சா,மற்றும் ஹெரோயின் பாவிப்பதையும்; சிலர் சர்வசாதாரணமாக கஞ்சா,மற்றும் ஹெரோயின் விற்பனை செய்வதையும் அவதானிக்க முடிகின்றது.
மேற்குறிப்பிட்ட கிராம அலுவலர் பிரிவுகளில் உள்ள சில மாணவர்கள் போதை பொருளை கொள்வனவு செய்வதற்கு களவுகளிலும் ஈடுபட்டு வருவதோடு கொரோனாக்கு முந்திய காலங்களில் பாடசாலைக்கும் ஒழுங்காக செல்வதில்லை.
இப்பகுதி கிராம அலுவலர்கள்,பொருளாதர அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தங்களது கடமை நிலையங்களுக்கு சமூகம் அளிப்பது குறைவு. இவ் உத்தியோகத்தர்கள் தங்களது கடமை நேரத்தில் தங்களது குடும்ப மற்றும் தனிப்பட்ட வியாபர நடவடிக்கைகளிலும் ஈடுபடுவதாக அப் பகுதி மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
மேலும் மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் பெறும் சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர், சாமுதாயம் சார் உத்தியோகத்தர்கள் குறித்த கிராம அலுவலர் பிரிவுகளில் கள விஜயம் செய்ததாக மாதந்த தினக்குறிப்பில் குறிப்பிட்டு களவிஜயத்திற்குரிய கொடுப்பனவுகளை பெறுகின்றார்கள்.இருப்பினும் குறித்த கிராம அலுவலர் பிரிவுகளில் கடமையாற்றாது தங்களது வீடுகளுக்கு செல்வதை அவதானிக்க முடிகின்றது.மேலும் வாரத்தின் ஆக்கபூர்வமாக சமூகம் அளிக்கும்கிராம மட்ட உத்தியோகத்தர்கள் ஒரு மணிக்கு மேல் கடமை நிலையங்களில் இருப்பதில்லை.
அத்துடன் உடுவில் பிரதேச செயலாளர் முகுந்தனின் நிலை மேலும் மோசமாக உள்ளதாகவும்.பிரதேச செயலாளருக்கு உடுவில் பிரதேச நியாதிக்க எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பிரச்சனைகளை தெரிவிக்க மக்கள் மற்றும் சமூக சேவையாளர்கள் தொலைபேசி அழைப்பை மேற்கொண்டால் தொலைபேசி அழைப்பை அலட்சியம் செய்து வருகின்றார் எனவும் பாதிக்கபட்ட மக்கள் கவலைவெளியிட்டுள்ளனர்.
மேலும் பிரதேச செயலாளர் கரைச்சிப்பிரதே செயலாளராக கடமையாற்றிய காலத்தில் பல ஊழல் மற்றும் மோசடிகளுக்கு சொந்தக்காரர் என்பதோடு. முன்னாள் கிளிநொச்சி மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகத்தின் ஊழல் மற்றும் மோசடிகளுக்கு பக்க பலமாக செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.