போதைப்பொருள் மோசடி மூலம் ஈட்டப்பட்டதாக கருதப்படும் சொத்துக்களை சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவு, பணமோசடிச் சட்டத்தின் கீழ் தடை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது.
இதனுடன் தொடர்புடைய ஆண் சந்தேகநபரும் பெண் சந்தேகநபரும் நேற்று (28) கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட 43 வயதான சந்தேகநபரும், 43 வயதான பெண் சந்தேகநபரும் கொழும்பு 08, பொரளை பகுதியில் வசிப்பவர்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
தடை செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களின் சொத்துக்களின் விபரம் பின்வருமாறு
கந்தானையில் நான்கு மாடி வீடு
கொழும்பு 08, பொரளை பகுதியில் இரண்டு, இரண்டு மாடி வீடுகள்
கொழும்பு 08, பொரளை பகுதியில் மூன்று மாடி வீடு
ஜப்பான் எல்டோ கார்
வேகன் ஆர் கார்
சந்தேகநபர்கள் நேற்று (27) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஜூலை 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.