பிரதான செய்திகள்

போதைப்பொருள் மறுவாழ்வு நிலையத்தில் தப்பியோடிய கைதிகளில் 6 பேர் கைது!

பதுளை தல்தெனை போதைப்பொருள் மறுவாழ்வு நிலையத்தில் இருந்து தப்பிச் சென்ற 09 கைதிகளில் 06 பேர் சிறைச்சாலை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாரும் சிறைச்சாலை அதிகாரிகளும் இணைந்து மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது நேற்று (17) காலை இரண்டு கைதிகள் கைது செய்யப்பட்டதாகவும், இரவு வேளையில் நால்வர் கைது செய்யப்பட்டதாகவும் சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட நால்வரும் கந்தகெட்டிய வெள்ளவத்தென்ன பிரதேசத்தில் பதுங்கி இருந்ததாகவும், அவர்கள் வெல்லம்பிட்டிய, தெமட்டகொட, மட்டக்குளி மற்றும் மாளிகாவத்தை பிரதேசங்களைச் சேர்ந்த 23 முதல் 27 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

சந்தேகநபர்கள் இன்று (18) பதுளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

தப்பியோடிய மேலும் மூன்று கைதிகளை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

Related posts

கல்முனை ஜாமியா மன்பயில் ஹிதாயா அரபுகல்லூரியின் பட்டமளிப்பு விழா

wpengine

வவுனியா, புளியங்குளம் ஏ9 வீதியில் மாட்டுடன் முச்சக்கரவண்டி மோதல்

wpengine

வவுனியா வெடுக்குநாறி மலையில் அகற்றப்பட்ட சிலைகளை மீண்டும் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு!

Editor