போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட மூவருக்கு மரண தண்டனை விதித்து கொழும்பு மேலதிக நீதவான் ஆதித்ய படபெத்திகே இன்று வெள்ளிக்கிழமை (16) உத்தரவிட்டுள்ளார்.
2018ஆம் ஆண்டில் பேருவளை கடலில் மீன்பிடி படகில் 179 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டிருந்த மூவருக்கே மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் குற்றம்சாட்டப்பட்ட மேலும் ஐந்து பேரை விடுவித்து விடுதலை செய்ய கொழும்பு மேலதிக நீதவான் ஆதித்ய படபெத்திகே உத்தரவிட்டுள்ளார்.