நான்கு இராணுவ விசேட படையணி வீரர்களை ஐஸ் போதைப்பொருட்களுடன் பொலிசாரினால் கைது செய்துள்ளனர்.
கலேன்பிந்துனுவெவ பொலிஸ் பிரிவின் உப்புல்தெனிய பகுதியில் குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக கலேன்பிந்துனுவெவ பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
அக்மீமன, ஹொரவ்பொத்தானை, லுனுகல மற்றும் பரசன்கஸ்வெவ ஆகிய பகுதிகளை சேர்ந்த நான்கு சந்தேக நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் வெள்ளிக்கிமை (14) கஹடகஸ்திகிலிய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவிருந்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கலேன்பிந்துனுவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனமை குறிப்பிடத்தக்கது.