பிரதான செய்திகள்

போக்குவரத்து பாதிப்பு மன்னார் மக்கள் அவதி! வடமாகாண போக்குவரத்து அமைச்சரே!

பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை கருத்தில் கொண்டு தனியார் போக்குவரத்துச் சேவைகள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து இன்று (27) முதல் வடமாகாண ரீதியில் பணிப்பகிஸ்கரிப்பை ஆரம்பித்துள்ளனர்.

வட இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் குறித்த பணிப்பகிஸ்கரிப்பு இன்று (27) காலை முதல் மன்னாரிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

மன்னார் தனியார் பேருந்து தரிப்பிடத்தில் சகல தனியார் பேருந்துகளும் நிறுத்தப்பட்ட போதிலும் உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களுக்கான சேவைகளை மேற்கொள்ளாது பணியாளர்கள் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர்.

இதனால் பாடசாலை மாணவர்கள்,பயணிகள்,உற்பட அனைவரும் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.

குறிப்பாக மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட மீள் குடியேற்றம் செய்யப்பட்ட கிராமங்களில் அதிகலவில் தனியார் போக்குவரத்துக்கள் மாத்திரமே சேவையில் ஈடுபட்டு வந்த நிலையில் இன்றைய பணிப்பகிஸ்கரிப்பின் காரணமாக அப்பகுதி மக்களும் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.

மன்னார் போக்குவரத்துச் சங்கத்தின் சாரதிகள்,நடத்துனர்கள் மற்றும் பணியாளர்கள் பதாதைகளை ஏந்தியவாறு பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் மக்கள் இலங்கை அரச போக்குவரத்துச் சேவையினூடாக தமது பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

தனியார் பேருந்திற்கு 60 வீதமும்,இலங்கை அரச போக்குவரத்துச் சேவை பேருந்திற்கு 40 வீதமும் என்ற விகிதாசாரத்தில் கடந்த 3 வருட கால முயற்சியின் பின் இணைந்த நேர அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ள நிலையில் இலங்கை அரச போக்குவரத்துச் சேவை இதற்கு ஒத்துழைப்பு வழங்காத நிலையில் அத்துமீறிய சேவையினை மேற்கொண்டு வருகின்றது.

இவ்விடையம் தொடர்பாக மத்திய அரசுடனும்,மாகாண அரசுடனும் சந்திப்புக்களை ஏற்படுத்தியும் எதுவித பலனும் இதுவரை எமக்கு எட்டப்படவில்லை.

இந்த நிலையிலே தாம் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து இன்று திங்கட்கிழமை முதல் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வருவதாக மன்னார் தனியார் போக்குவரத்துச சங்கத்தின் தலைவர் கே.முருகேஸ் தெரிவித்துள்ளார்.

தனியார் பேருந்துகளும்,அரச பேருந்துகளும் ஒரே தரிப்பிடத்தில் நிறுத்தப்பட்டு போக்குவரத்துச் சேவைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை முன் வைத்தும் தமது போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மன்னார் தனியார் போக்குவரத்துச சங்கத்தின் தலைவர் கே.முருகேஸ் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா ஆகிய மாவட்டங்களிலும் மேற்படி பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.625.0.560.320.500.400.197.800.1280.160.95

அரச பேருந்துகள் நிரம்பி வழிந்ததால் ஏராளமான மக்கள் போக்குவரத்து செய்ய எவ்வித வழியுமின்றி தவித்து வருகின்றனர்.625.0.560.320.500.400.197.800.1280.160.95 (2)

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட சில முச்சக்கரவண்டிச் சாரதிகள் பயணிகளிடம் கொள்ளை இலாபம் சம்பாதித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.625.0.560.320.500.400.197.800.1280.160.95

Related posts

மன்னாரில் கஞ்சா மூடி மறைக்கும் பொலிஸ் அதிகாரிகள்

wpengine

மின்னஞ்சலைக் கண்டுபிடித்த டொம்லின்சன் காலமானார்

wpengine

அரசாங்கம் நாடகங்களை அரங்கேற்றி வருகின்றது! அதில் கருணா,உலகக்கிண்ணம் என பல

wpengine