இஸ்லாமியர்களின் புனிதக் கடமைகளில் ஒன்றான புனித ரமழான் நோன்பினை நோற்கவும் அதனைத் துறப்பதற்கும் வசதிகளை செய்து கொடுப்பது நன்மைகளை அள்ளிக் கொடுக்கும் புண்ணிய கருமமாகும்.
அந்த வகையில் தான் அல்லாஹ்வின் அருளை பெற்றுக் கொள்ளும் விதமாக இல ங்கை பொலிஸ் திணைக்களமும் நோன்பாளிகளுக்கு நோன்பு துறக்கும் விதமாக ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
நோன்பு துறக்கும் வைபவமாக இன் றைய தினம் அதனை ஏற்பாடு செய்துள்ள பொலிஸ் திணைக்களம் இதனூடாக தேசிய நல்லிணக்கத்தையும் பரஸ்பர நட்புறவையும் வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
ரமழான் என்பது இஸ்லாமிய நாட்காட் டியில் (சந்திரனை அடிப்படையாக கொண்டது) உள்ள 12 மாதங்களில் ஒரு மாதமா கும். இந்த மாதத்தில் தேகாரோக்கிய முள்ள ஒவ்வொரு முஸ்லிமும் நோன்பு நோற்பது கட்டாயமாகும்.
பொதுவாக அதிகாலையில் சூரிய உதயத்துக்கு முன்பதாக உணவு, பானத்தை நிறுத்தி நோன்பு நோற்கும் முஸ்லிம்கள் சூரியன் மறையும்போது பேரீச்சம் பழம், தண்ணீர் அருந்தி தமது நோன்பினைத் துற ப்பர். இவ்வாறு ஒரு மாதம் முழுவதும் பகல் நேரத்தில் நோன்பிருப்பது ஒவ்வொரு தேகாரோக்கியமுள்ள முஸ்லி கடமையாகும்.
இதனூடாக அல்லாஹ் மீதான இறை பக்தி, விசுவாசம் என்பன உறுதிப்படுத்தப்படுவது எதிர்பார்க்கப்படுகிறது. அத்து டன் இந்த நோன்பூடாக ஒருவரின் பசி நிலைமையை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ளும் சந்தர்ப்பமும் கிட்டுகிறது.இதனை விட வருடம் பூராகவும் தொடர்ச்சியாக செயற்பட்டுக் கொண்டிருக்கும் உடலுக்கு நாம் வழங்கும் சிறிய ஓய்வாகக் கூட இந்த நோன்பை அடையாளப்படுத்த லாம். ஏனெனில் நோன்பு நோற்பது உட லுக்கும் மனதுக்கும் சிறந்தது என வைத்தியர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அல்லாஹ்வின் உபதேசங்களை உள்ளட க்கிய இறைக்கட்டளைகள் அடங்கிய புனித அல்குர்ஆனும் முதன் முதலாக இந்த ரமழான் மாதத்திலேயே அருளப்பட்டது.
இந்த மாதத்தில் செய்யப்படும் ஒவ் வொரு நன்மைக்கும் ஏனைய மாதங்களில் கிடைக்கும் கூலியை விட அதிகமாக இறைவனின் கூலி கிடைக்கும். இதனாலோ என்னவோ இம் மாதத்தில் முஸ்லிம்களில் பலர் அதிகதிகமாக தான தர்மங்களில் ஈடுபடுவதை நாம் அவதானிக்கிறோம்.
அனைத்து முஸ்லிம்களும் தனது வருடாந்த வருமானத்தில் 4 சதவீதம் ஏழை எளியவர்களுக்கு வழங்குவது கட்டாயமாகும். அதன்படி அந்த நடவடிக்கைகளையும் பெரும்பாலும் முஸ்லிம்கள் இம் மாதத்திலேயே முன்னெடுப்பர். ஏனெனில் இம் மாதத்தில் கிடைக்கும் புண்ணியமே அதற்குக் காரணமாகும்.
முஹம்மத் நபி (ஸல்) கூறியதாக அனஸ் (ரழி) அறிவிக்கிறார். ‘தர்மங்களில் மிகச் சிறந்தது பசியால் இருப்பவருக்கு வயிறார உணவு கொடுப்பதாகும். இதிலிருந்து பசியில் இருக்கும் ஒருவருக்கு உணவு கொடுப்பது எந்தளவு உயர்ந்த நடவடிக்கை என்பதை விளங்க முடிகிறது.
எங்களுடைய நற்பண்புகளைப் பாதுகா க்க வேண்டுமெனில் பொருட்கள், பதவி கள் மீதான எமது பேராசையில் இருந்து தவிர்ந்திருக்க வேண்டியது அவசியமாகும்.
முஹம்மத் (ஸல்) ஒருமுறை பின்வருமாறு கூறியதாக நபித்தோழர் நபி பின் மாலிக் (ரலி) இப்படி அறிவிக்கிறார். ‘கடும் பசியால் வாடும் இரு ஓநாய்கள் ஆட்டு மந்தையொன்றில் புகுந்து ஏற்படுத்தும் நாச த்தை விட பொருட்கள், பதவிகள் மீதான பேராசை நன்மைகளை அழித்துவிடும்.
அந்த வகையில் பேராசையிலிருந்து விடு பட்டு அதிகதிகமாக நன்மையான கருமங் களை செய்யும் வகையில் நாம் எமது செயற்பாடுகளை அமைத்துக் கொள்ளல் வேண்டும். அத்துடன் தான தர்மங்கள் செய்யும்போது நாம் பயன்படுத்தியவற்றை கொடுப்பதில் இருந்து தவிர்ந்து கொள்ளல் வேண் டும். அதாவது பழைய, நாம் பயன்படுத்தி, ஒதுக்கியவற்றை தர்மம் செய்யாது தான் பயன்படுத்துவதை ஒத்த நல்லவற்றையே தர்மம் செய்ய வேண்டும்.
புனித அல்குர்ஆனின் மூன்றாவது அத்தியாயத்தில் 92 ஆவது வசனத்தில் இறைவன் பின்வருமாறு கூறுகிறான்.
‘நீங்கள் விரும்புவதிலிருந்து தானதர்மம் செய்யாதவரை அதிலிருந்து நன்மை கிடைக்காது. நீங்கள் எதனை செலவு செய்தாலும் அதனை அல்லாஹ் நன்கறிவான். அந்த வகையில் நாம் பிறருக்கு கொடுக்கும்போது நல்லவற்றையே கொடுக்க வேண்டும். மற்றையவரின் பசிக்கொடுமையைப் புரிந்து கொண்டு அதனை நிவர்த்தி செய்ய உபகாரம் செய்ய வேண்டும்.
மரணத்தின் பின்னரான நன்மை, தீமை யை அளவிடும் விசாரணையில் நாம் வெற்றி பெற்று சொர்க்கத்தை அடைய வேண்டுமாயின் அதிகதிகமான நன்மை களைச் செய்ய வேண்டும். ஏனைய மாத ங்களை விட அதிக நன்மைகள் இம் மாதத்தில் புரியப்படும் நற்கருமங்களுக்குக் கிடை க்கும் நிலையில் அதிகமதிகமாக நன்மைகள் செய்வோமாக!
அப்துல் பாரூக் புவாத்
பொலிஸ் பரிசோதகர்
பொறுப்பதிகாரி, பொலிஸ் ஊடகப் பிரிவு