பிரதான செய்திகள்

பொலிஸார் இன்று விசேட சத்தியப்பிரமாணம்.

நாடளாவிய ரீதியில் பொலிஸார் இன்று (17) விசேட சத்தியப்பிரமாணம் ஒன்றை செய்துகொள்ளவுள்ளனர்.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால், பொலிஸாருக்காக உருவாக்கப்பட்டுள்ள ஒழுக்க விதிக் கோவையை பின்பற்றி நடப்பதாக சத்தியப்பிரமாணம் செய்யப்படவுள்ளது.

இந்த ஒழுக்க விதிக் கோவை இன்று (17) காலை 9 மணியளவில் வெளியிடப்படவுள்ளது.

இதன்பிரகாரம் அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் முன்னிலையில் இன்றைய தினம் சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் ஆரியதாச குரே தெரிவித்தார்.

Related posts

சட்ட விரோதமான வழிபாட்டு தளங்கள் நீக்கப்படும் பிரதேச செயலாளர்

wpengine

மன்னார் நகர சபையின் புதிய அலுவலக மாடிக்கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு

wpengine

பேஸ்புக் பயனர் எண்ணிக்கை 200 கோடி! லாபம் 76.6%

wpengine