Breaking
Sun. Nov 24th, 2024

கிளிநொச்சி பன்னங்கண்டிப் பகுதியில் பொலிஸாரின் துணையுடன் தொடர்ந்தும் சட்டவிரோத மணல் அகழ்வுகள் இடம்பெற்று வருவதாக விவசாயிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இதன் காரணமாக விவசாய நிலங்கள் எதிர்காலத்தில் பயிர்செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், விவசாய நிலங்களில் எதிர்காலத்தில் பயிர்ச் செய்கை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டு வருவதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

கிளிநொச்சி பன்னங்கண்டி பகுதியில் தொடர்ந்தும் சட்டவிரோத மணல் அகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.

கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து வெளிமாவட்டங்களுக்கு மணல் கொண்டு செல்வதற்கான அனுமதிகள் எவையும் இல்லாத நிலையிலும், இந்தப்பகுதியில் இருந்து தினமும் மாலை வாகனங்களில் பெருமளவான மணல் கொண்டு செல்லப்படுகின்றன.

இதனைவிட பகல் வேளைகளில் ஆற்றுப்படுக்கைகளிலும், வயல் நிலங்களிலும், இருந்து சட்டவிரோத மணல் அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டு வீதியின் இருபுறமும் இறக்கப்பட்டு குவிக்கப்படுகின்றன.

இதேவேளை பன்னங்கண்டிப் பிரதேசத்தினை அடுத்துள்ள மருதநகர் பகுதியில் வீட்டுத்திட்டப் பயனாளிகள் தமக்குத்தேவையான மணலைப் பெற்றுக்கொடுக்க முடியாத நிலை காணப்படுகின்றது.

பன்னங்கண்டிப்பகுதியில் தொடர்ந்து சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபடும் வாகன சாரதிகளுக்கும், பொலிஸாருக்கும் நெருக்கமான தொடர்புகள் இருப்பதாகவும் அந்தப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

சட்டவிரோத மணல் அகழ்வுகள் தொடர்பில் கிளிநொச்சி பொலிசாருக்கோ, அல்லது மாவட்டத்தில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவதற்கு நியமிக்கப்பட்டுள்ள போதைப்பொருள் குற்றத்தடுப்பு பொலிசாருக்கு தகவல்களை வழங்கினால் உரிய நடவடிக்கை மேற்கொள்வதில்லை.

மாறாக மணல் அகழ்வில் ஈடுபடுபவர்களை பாதுகாப்பாக விட்டுவருகின்றனர் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இவ்விடயம் தொடர்பில் அதிகாரிகள் உரிய நடவடிக்கையினை முன்னெடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *