செய்திகள்பிரதான செய்திகள்

பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இளைஞர் காவலில் இருந்தபோது சுகவீனமடைந்து மரணம் .

போதைப்பொருள் வைத்திருந்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக கொஸ்கொட பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இளைஞர் ஒருவர், பொலிஸ் காவலில் இருந்தபோது சுகவீனமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் போது உயிரிழந்துள்ளார்.

கொஸ்கொட, நாற்சந்தி பகுதியைச் சேர்ந்த இருபத்தேழு வயதுடைய தரிது சிறிவர்தன டி சொய்சா என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நேற்று (1) போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இளைஞன், பொலிஸ் காவலில் இருந்தபோது திடீரென சுகவீனமடைந்து  வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படும் போது உயிரிழந்ததாக கொஸ்கொட பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த இளைஞனின் மரணம் குறித்து முறையான விசாரணை நடத்தி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த இளைஞனின் தந்தை நிமல் சிறிவர்தன டி சொய்சா கூறுகையில், தனது மகன் கைது செய்யப்பட்டபோது கொஸ்கொட பொலிஸ்  அதிகாரிகள் அவரை கடுமையாக தாக்கினர் என்றார்

Related posts

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு!

wpengine

இன்றைய தினம் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்படமாட்டாது.

wpengine

வலுக்கும் வெங்காயச் சண்டை

wpengine