Breaking
Sun. Sep 8th, 2024
(ஊடகபிரிவு)
வடக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் 2016 ஆம் ஆண்டுக்கான மாகாண அபிவிருத்தி நன்கொடையின் (PSDG) கீழ் 11 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் மன்னார் மாவட்ட, முசலி பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட, பொற்கேணியில் இருந்து பண்டாரவெளி செல்லும் பிரதான வீதியினை  மாகாண சபை உறுப்பினர்களின் ஆகியோரீன்  வேண்டுகோளுக்கு இணங்கவும் அப்பகுதி மக்களது நலனைக் கருத்தில் கொண்டும் வடக்கு வீதி அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களால் உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்ட தலா 6 மில்லியன் ஒதுக்கீட்டில், மாகாண சபை உறுப்பினர்கள் ரிப்ஹான் பதியுதீன் மற்றும் அயூப் அஸ்மின் ஆகியோரது  தெரிவின் அடிப்படையில் இவ்வீதியின் வேலைத்திட்டத்தை நேற்று 29-04-2016  காலை 11.30 மணியளவில் அமைச்சர் பா.டெனிஸ்வரன் ஆரம்பித்து வைத்தார்.

நிகழ்விற்கு பண்டாரவெளி பள்ளிவாசல் மௌலவி, வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் டி.சிவராஜலிங்கம், வீதி அபிவிருத்தித் திணைக்கள மன்னார் வவுனியா மாவட்ட பிரதம பொறியியலாளர் ரகுநாதன், மன்னார் மாவட்ட நிறைவேற்றுப் பொறியியலாளர் எம்.துசியந், மற்றும் அக்கிராமத்து அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

fe1ef199-a629-4d83-abd4-1321a53cb425

0d9052d1-320e-4e4b-89b0-bc75e2c000de

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *